districts

img

கட்டி முடிக்கப்பட்ட நியாய விலைக்கடை உடனடியாக திறக்கக்கோரி ஆர்ப்பாட்டம்

நாமக்கல், செப்.4- வெப்படை எம்ஜிஆர் நகரில் கட்டி  முடிக்கப்பட்ட நியாய விலைக் கடையை உடனடியாக திறக்க வலியு றுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங் கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட னர். நாமக்கல் மாவட்டம், குமாரபாளை யம் வட்டம், வெப்படை நால் ரோடு வழி யாக தினமும் ஆயிரக்கணக்கான மக் கள் வந்து செல்கின்றனர். ஆனால், பொதுக்கழிப்பிடம் என்பது வெப்படை நால்ரோட்டில் இல்லை. எனவே, தமி ழக அரசும் ஊராட்சி நிர்வாகமும் வெப் படை நால் ரோட்டில் பொதுக் கழிப்பி டம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வெப்படை எம்ஜிஆர் நகரில்  ஏற்கனவே கட்டி முடிக்கப்பட்டு இன் னும் திறக்கப்படாமல் உள்ள நியாய விலைக்கடையை உடனடியாக திறக்க வழங்கல் துறை அதிகாரிகள் நடவ டிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர். வெப்படை நால் ரோட்டில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு வாலிபர் சங்க ஒன்றிய செயலாளர்  ராஜ்தேவ் தலைமை வகித்தார். இதில், மாவட்ட செயலாளர் எம்.மணிகண்டன், ஒன் றிய தலைவர் கவின்ராஜ் உட்பட திரளா னோர் கலந்து கொண்டனர்.