districts

img

டிடிபி மில் நியாயவிலை கடையை தினசரி செயல்படுத்த கோரி ஆர்ப்பாட்டம்

திருப்பூர், ஜூலை 6 - எட்டு மாதங்களாக வாரத்தில் 3 நாட்கள்  மட்டுமே செயல்படும் டிடிபி மில் நியாய விலைக் கடையை தினசரி செயல்படும் கடை யாக மாற்ற வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியினர் புதனன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். திருப்பூர் மாநகராட்சி முதல் மண்டலம் வார்டு எண் 13 அனுப்பர்பாளையம் புதூர் டிடிபி மில் நியாயவிலை கடை, கடந்த 8 மாதங்களாக வாரத்தில் 3 நாட்கள் மட்டுமே செயல்படுகிறது. இதனால், பொது மக்க ளுக்கு ரேசன் பொருட்கள் முறையாக விநியோ கம் செய்யப்படுவதில்லை. இந்த நியாய விலை கடையை தினசரி திறந்து பொது மக் களுக்கு அனைத்து பொருட்களையும் வழங்க. திருப்பூர் வளர்மதி கூட்டுறவு நிர்வா கம் வழிவகை செய்ய வேண்டும் என வலி யுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.  இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அனுப்பர்பா ளையம் புதூர் கிளை செயலாளர் என்.விஸ்வ நாதன் தலைமை வகித்தார். வேலம்பாளை யம் நகரச்செயலாளர் ச.நந்தகோபால், மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.ரங்க ராஜ் ஆகியோர் உரையாற்றினர். விபி.சுப்பிர மணியம் உட்பட 100க்கும் மேற்பட்ட பொது மக்கள் பங்கேற்றனர்.