அன்னூர், டிச.13- மாணவரை தாக்கிய ஆசிரியரை கண்டித்து அன் னூரில் இந்திய மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத் தில் ஈடுபட்டனர். கோவை மாவட்டம், சரவணம்பட்டியில் தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு 11ஆம் வகுப்பு படித்து வந்த மிதுன் என்கிற மாணவன் இறுக்கமான சட்டை அணிந்து வந்ததாக கூறி அப் பள்ளியின் இயற்பியல் ஆசிரியர் சிவரஞ்சித் என்பவர் கடுமையாக தாக்கியுள்ளார். இதில் படுகாயமடைந்த மாணவன் மிதுன் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதனைத் தொடர்ந்து தாக்குதல் நடத்திய ஆசிரி யரை கண்டித்து ஞாயிறன்று இந்திய மாணவர் சங்கத் தினர் அன்னூரை அடுத்த பொன்னே கவுண்டன் புதூ ரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் மாணவர் சங்க நிர்வாகிகள் சௌந்தர், ரூபா, ராகுல், அனுப் பிரியா, ஜமுனா, காவியா உட்பட பலர் கலந்து கொண் டனர்.