சேலம், ஜூலை 19- தக்காளி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வை கண்டு கொள்ளாத ஒன்றிய அரசை கண்டித்து அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் பெத்தநாயக்கன்பாளையத்தில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. தக்காளி, சின்ன வெங்காயம், இஞ்சி உள்ளிட்ட பொது மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் உணவுப் பொருட்களின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. இதனால் மக் களின் வாங்கும் சக்தி குறைந்து வருகிறது. அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை ஒன்றிய பாஜக அரசு கட்டுப்படுத்த வேண்டும். தமிழ்நாடு அரசு அனைத்து மகளி ருக்கு நிபந்தனையின்றி உரிமைத் தொகை வழங்க வேண்டும். ஆரியூர் பகுதி மக்களின் அடிப்படைத் வசதிகளை மேம் படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட் டத்தில் முன்வைக்கப்பட்டது. மாதர் சங்க ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்டப் பொருளாளர் க.பெருமா தலைமை ஏற்றார். கோரிக்கைகளை விளக்கி மாவட்டச் செயலாளர் எஸ்.எம்.தேவி, மாநிலக் குழு உறுப் பினர் ஐ.ஞானசௌந்தரி ஆகியோர் உரையாற்றினர். போராட்டத்தை வாழ்த்தி மாற்றுத்திறனாளிகள் சங்க மாவட்ட நிர்வாகிகள் கந்தன், காளிதாஸ் ஆகியோர் பேசினர். இதில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க பெத்த நாயக்கன்பகுதி நிர்வாகிகள் உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டனர்.