சேலம் செப்.5- பில்கிஸ் பானு பாலியல் பலாத்கார வழக்கில் 11 குற்ற வாளிகளை விடுதலை செய்த பாஜக அரசை கண்டித்து மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பில்கிஸ் பானு பாலியல் பலாத்கார வழக்கில் கைதான 11 குற்றவாளிகளை குஜராத் பாஜக அரசு சுதந்திர தினத்தன்று விடுதலை செய்தது. இதனைக் கண்டித்து அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் ஆர். வைரமணி தலைமை வகித்தார். இதில், மாநிலக்குழு உறுப்பி னர்கள் ஐ.ஞானசௌந்தரி, டி.பரமேஸ்வரி, மாவட்ட செயலா ளர் எஸ்.எம்.தேவி, மாவட்ட பொருளாளர் கே.பெருமா உட்பட திரளானோர்க கலந்து கொண்டனர். கோவை இதேபோன்று கோவை மாவட்டத்தில் பல்வேறு இடங் களில் பில்கிஸ் பானு பலாத்கார வழக்கில் குற்றவாளிகளை விடுதலை செய்த பாஜக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் மாவட்ட தலைவர் ஜோதிமணி, செயலாளர் சுதா உள்ளிட்ட மாவட்ட நிர்வாகிகள், மாதர் சங்கத்தினர் திர ளாக பங்கேற்றனர்.