districts

img

அனைத்து பள்ளிகளுக்கும் ஏஐ பயிற்சி அன்பில் மகேஷ் பொய்யாமொழி தகவல்

கோவை, டிச.16- அனைத்து பள்ளிகளுக்கும் ஏஐ மூலம் தொழில்நுட்ப மையங்கள் அமைக்கப்பட்டு, அதன் மூலம் மாணவர்களுக்கு பயிற்சி  அளிக்கப்பட்டு வருகிறது என கோவையில்  அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி  தெரிவித்தார். கோவையில் உள்ள கலைஞர் தொழில் நுட்பக் கல்லூரியில் மாநிலம் தழுவிய கல்வி  அலுவலர்களுக்கான 2 நாள் ஆய்வுக் கூட்டம்  திங்களன்று துவங்கியது. இதை, தமிழக கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி துவக்கி வைத்தார். இதில்,  பள்ளிக்கல்வித்துறை செயலாளர் மதுமதி, மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி, மாநக ராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் உட் பட அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்ட னர். இக்கூட்டத்தில் அமைச்சர் பேசியதாவது,  அரசு பள்ளிகளில் கற்போம் கற்பிப்போம்  மூலம் ஏற்படுத்தப்பட்டுள்ள ஆய்வுக்கூடங்க ளில் மாணவர்கள் கண்டுபிடிப்புகளுக்கு கார ணம் அனைத்து அலுவலர்களின் ஒருங் கிணைப்பால் மட்டுமே சாத்தியம், அரசு பள்ளி  மாணவர்களின் கண்டுபிடிப்பு அனைவரா லும் பாராட்டப்பட்டு வருவது மகிழ்ச்சி அளிக் கிறது. கல்வித்துறையில் தொடர்ந்து வளர்ச்சி  பெற்ற மாநிலமாக தமிழகம் இருந்து வரு கிறது, என்றார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் கூறுகை யில், அனைத்து வசதிகளுடன் கூடிய ஆய்வுக்கூடங்களை அமைப்பதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகிறது. பிளஸ்  1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு மட்டும் கொடுக் கப்பட்ட வசதி அனைத்து மாணவர்களுக்கும் கிடைக்க வழிவகை செய்யப்பட்டு வருகி றது. பள்ளிக்கல்வித்துறை வளர்ச்சி தொடர் பாக ஒன்றிய அரசு, தனியார் சர்வே நிறுவனத் துடன் இணைந்து சர்வே எடுக்கிறார்கள். அது  பெரும்பாலும் தவறாகவே உள்ளது. மைக் ரோசாப்ட் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்த  ஒரே அரசு தமிழக அரசு தான். அனைத்து பள்ளிகளுக்கும் ஏஐ மூலம் தொழில்நுட்ப மையங்கள் அமைக்கப்பட்டு அதன் மூலம் அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வரு கிறது என்றார்.