நாமக்கல், அக்.20- குமாரபாளையம் அருகே நள்ளிரவில் ஏற்பட்ட தீ விபத்தில் கார் மற்றும் இருசக்கர வாகனங்கள் தீக்கிரையாகின. நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் அருகே உள்ள ஓலப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் தினேஷ் (25). இவர் தனியார் நிறுவனங்களுக்கு கணக்குகளை சரிபார்க்கும் நிறு வனம் நடத்தி வருகிறார். இந்நிலையில், சனியன்று இரவு வீட்டுக்கு சென்ற தினேஷ், கார் நிறுத்தும் இடத்தில் தனது இரு சக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு சென்றார். நள்ளிரவு 12 மணி யளவில் திடீரென வீட்டில் இருந்து புகை வருவதை கண்ட அக்கம், பக்கத்தினர், தினேசுக்கு மொபைல் போன் மூலம் தகவல் தெரிவித்தனர். இதனையறிந்த தினேஷ் குடும்பத்தி னர், வீட்டை விட்டு வெளியே வருவதற்குள் தீ முழுவது மாக கொளுந்து விட்டு எரிந்தது. இதில் டாடா இண்டிகா கார், அப்பாச்சி உள்ளிட்ட இருசக்கர வாகனங்கள் தீக்கிரையா கின. இதுகுறித்து தகவலறிந்த தீயணைப்புத்துறை வீரர்கள் முன்பக்க கதவை திறக்க முடியாததால் கதவை உடைத்து ஒரு மணி நேரத்திற்கு மேலாக போராடி தீயை முழுவது மாக அணைத்தனர். இவ்விபத்துக்கான காரணங்கள் இது வரை தெரியாத நிலையில், குமாரபாளையம் காவல் துறையி னர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரு கின்றனர்.