கோவை, அக். 22- தீபாவளி பண்டிகையையொட்டி சனிக் கிழமை முதல் 24-ந்தேதிவரை பொதுமக்கள் செல்லும் முக்கிய சாலைகளில் போக்கு வரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து காவல்துறையினர் கூறுகை யில், ஆத்துப்பாலத்தில் இருந்து ஒப்பணக் கார வீதி வழியாக அவிநாசி ரோடு செல்லும் வாகனங்கள் ஒப்பணக்கார வீதியை பயன் படுத்தாமல் உக்கடத்தில் இருந்து வலதுபுறம் திரும்பி வாலாங்குளம், சுங்கம் வழியாக செல்ல வேண்டும். உக்கடத்தில் இருந்து மேட்டுப்பாளை யம், மருதமலை, தடாகம் செல்லும் வாகன ஓட்டிகள் பேரூர் பைபாஸ் செல்லும் ரவுண் டானா, செட்டி வீதி, சலீவன் வீதி காந்தி பார்க் வழியாக செல்ல வேண்டும். புட்டு விக்கிரோடு பாலக்காட்டில் இருந்து கோவை வரும் வாகனங்கள் போத்தனூர், சுந்தராபுரம், பொள்ளாச்சி சாலை ஆகிய பகுதிகளுக்கு செல்லும் வாகனங்கள் தவிர மற்ற வாகனங்கள் சுண்ணாம்பு காளவாயில் இடதுபுறம் திரும்பி புட்டுவிக்கி ரோடு உக்கடம் வழியாக செல்ல வேண்டும். உக்கடத்தில் இருந்து கோவைப்புதூர் மதுக்கரை மற்றும் பாலக்காடு செல்லும் வாகனங்கள் பேரூர் பைபாஸ் ரோடு, செல்வபுரம் ரவுண்டானா புட்டுவிக்கிரோடு வழியாக செல்லலாம். காந்திபுரம் கிராஸ்கட்ரோட்டில் பொருட் கள் வாங்க வருபவர்கள் தவிர, ஆர்.எஸ். புரம், வடவள்ளி, மேட்டுப்பாளையம் செல்லும் வாகன ஓட்டிகள் 100 அடி சாலை, சிவானந்தா காலனி சாலையை பயன்படுத்தி செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்ல லாம். காந்திபுரம் கிராஸ்கட்ரோட்டில் பொருட் கள் வாங்க வருபவர்கள் மாநகராட்சி வாகன நிறுத்த இடங்கள், கடைகளின் இடங்களில் வாகனங்களை நிறுத்த வேண்டும். சனி, ஞாயிறு விடுமுறை நாட்களில் கிராஸ்கட் ரோட்டில் உள்ள மாநகராட்சி பள்ளி வளா கத்தை வாகனம் நிறுத்தும் இடங்களாக பயன் படுத்தலாம். கடைவீதி மற்றும் மக்கள் கூடும் பொது இடங்களில், பொதுமக்கள் தங்களது வாகனங்களை மாநகராட்சி நிறுத்தும் இடம் அல்லது கடை உரிமையாளர்களின் இடங்களில் மட்டுமே நிறுத்த வேண்டும். சாலைகளில் வாகனங்களை நிறுத்த கூடாது. பொதுமக்கள் இதற்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.