districts

வனத்துறையால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிப்பு நெருப்பூர் முதல் பென்னாகரம் வரை சிபிஎம் நடைபயணம்

தருமபுரி, மே 15- வனத்துறையினரால் விவசாயி களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படு வதை கண்டித்து, மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி சார்பில், நெருப்பூர் முதல் பென்னாகரம் வரை நடைபய ணம் நடைபெற உள்ளது. இதுகுறித்து மார்க்சிஸ்ட் கட்சி யின் தருமபுரி மாவட்டச் செயலா ளர் ஏ.குமார் விடுத்துள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது, தருமபுரி மாவட்டம், ஒகேனக்கலில் மீனவர் கள் குடியிருப்பு மீது வனத்துறையி னர் தாக்குதல் தொடுத்துள்ளனர். வீடுகள் அடித்து நொறுக்கப்பட்டுள் ளன. பெண்கள், குழந்தைகள்  என்றும் பாராமல் தாக்கப்பட்டுள்ள னர். மனித உரிமை மீறல்கள் நடை பெற்றுள்ளன. மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி இதனை வன்மையாக கண்டிக்கிறது. வனத்துறையினரின் அத்துமீறல்கள் மீது மாவட்ட நிர் வாகம் மற்றும் வனத்துறை உயரதி காரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். நெருப்பூர் – பென்னாகரம் வரை நடைபயணம் பென்னாகரம் வட்டத்திற்குட் பட்ட நெருப்பூர் பகுதியில் ஏமனூர்,  சிங்காபுரம், அரகாசனஅள்ளி ஊராட்சி, எர்ரப்பட்டி ஆகிய பகுதி களில் பல்லாண்டு காலம் வீடுகள் கட்டி, வேளாண்மை வரும் விவசா யிகளை வனத்துறையினர் நில  வெளியேற்றம் செய்ய முயன்று வருகின்றனர். காவிரி ஆற்றின் கரையோர பகுதியில் விவசாயிகள் சாகுபடி செய்வதை தடுத்து வருகின்றனர். பிக்கிலி, மலையூர், ஏரிமலை உள்ளிட்ட பகுதிகளில் கால்நடைகள் மேய்ப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. வனத் ்துறையினரால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதை எதிர்த்து, ஜூன் முதல் வாரத்தில்  நெருப்பூர் முதல் பென்னாகரம் வரை நடைபயணம் மேற்கொள் வது மற்றும் வட்டாட்சியர் அலுவல கம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தப் படும். மாவட்டம் முழுவதும் கள ஆய்வு அரூர் அருகே உள்ள கீரைப் பட்டி கிராமத்தில் பட்டியலின இளைஞருக்கு முடிவெட்ட மறுத்த  தீண்டாமை வன்கொடுமை சமீபத் தில் நடந்துள்ளது. ஏற்கனவே,  இப்பகுதியில் கொட்டாங்குச்சியில் தேநீர் அளித்தது, பேருந்தில் மாட்டுக்கறி எடுத்துச்சென்ற பெண்ணை வனப்பகுதி அருகே  கீழே இறக்கிவிட்டது போன்ற சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. அரூர் பகுதியில் தொடரும் தீண் டாமை கொடுமைகளுக்கு முற் றுப்புள்ளி வைக்கவும், இதுகு றித்த சட்ட விழிப்புணர்வு ஏற்படுத் தவும் வலியுறுத்தி அரூர் வட்டாட் சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.  மாவட்டம் முழுவதும் பல்வேறு வடிவங்களில் தொடரும் தீண் டாமை சம்பவங்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டு தமிழக அரசிடம் மனு அளிப்பது என  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முடிவு செய்துள்ளது. இவ்வாறு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

;