தருமபுரி, பிப்.25- கம்பைநல்லூரிலுள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும் பத்தினருக்கு தலா ரூ.25 லட்சம் மற் றும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும், என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலி யுறுத்தியுள்ளது. தருமபுரி மாவட்டம், காரிமங் கலம் வட்டம், கம்பைநல்லூர் கிரா மத்திலுள்ள தனியாருக்குச் சொந்த மான பட்டாசு ஆலையில், திங்க ளன்று எதிர்பாராதவிதமாக வெடி விபத்து ஏற்பட்டது. இதில் கம்பை நல்லூர் கிராமம், பூமிசமுத்திரத் தைச் சேர்ந்த திருமலர் (38), செண்ப கம் (35), திருமஞ்சு (33) ஆகிய மூன்று பெண்கள் சம்பவ இடத் திலேயே உயிரிழந்தனர். இந்நிலை யில், உயிரிழந்தவர்களின் குடும்பத் தினரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் ஏ.குமார், மாவட்டச் செயலாளர் இரா.சிசுபாலன், மொரப்பூர் ஒன்றி யச் செயலாளர் கே.தங்கராஜ், மலைவாழ் மக்கள் சங்க மாவட்டச் செயலாளர் கே.என்.மல்லையன், சிஐடியு மாவட்ட துணைச்செயலா ளர் ஆனஸ்ராஜ், வட்டக்குழு உறுப் பினர்கள் மாதேஷ், வீரபத்திரன், வாலிபர் சங்க தலைவர் அருண் ஆகியோர் செவ்வாயன்று நேரில் சந்தித்து சம்பவத்தை கேட்டறிந்து ஆறுதல் தெரிவித்தனர். தனியார் பட்டாசு ஆலை விபத் தில் பலியான மூன்று பெண்களின் குடும்பத்திற்கும், தலா ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும். குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். பொரு ளாதாரத்தில் பின்தங்கிய பட்டிய லின சமூகத்தை சேர்ந்த இந்த மூன்று குடும்பங்களுக்கும் இலவச வீட்டுமனைப் பட்டாவுடன் அரசு வீடு கட்டித்தர வேண்டுமென, மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் வலி யுறுத்தியுள்ளனர்.