districts

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

குப்பை அகற்றுவதை  முறைப்படுத்த சிபிஎம் கோரிக்கை

குப்பை அகற்றுவதை  முறைப்படுத்த சிபிஎம் கோரிக்கை கோவை, ஜூன் 18- கோவை மாநகராட்சி பகுதிகளில் குப்பைகளை அகற்று வதில் உள்ள நடைமுறை சிக்கல்களை களைந்து ஒழுங்கு  படுத்த வேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தி யுள்ளது.  இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (மார்க்சிஸ்ட்) மாவட்ட  செயற்குழு கூட்டம் செவ்வாயன்று என்.ஆர்.முருகேசன்  தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் நிறைவேற் றப்பட்ட தீர்மானம் குறித்து மாவட்டச்செயலாளர் சி.பத்ம நாபன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, கோவை மாநகர தெருக்களில் குப்பைகள் தேங்கி கிடப்பது  தொடர்கிறது. ஏற்கனவே இருந்த (DUST PIN) குப்பைத் தொட்டிகள் அப்புறப்படுத்தப்பட்ட பின்பு, மாநகராட்சி நிர்வா கம் நேரடியாக வீடுகளில் குப்பை பெறுவதில் பெரும் நடை முறை சிரமங்கள் இருந்து வருகிறது. திடக் கழிவுகளைச் சேக ரிக்க வரும் வாகனங்கள் குறிப்பிட்ட நேரத்திற் வருவ தில்லை. அதே போல் அந்த வாகனங்கள் பழுது ஏற்பட்டால் மாற்று வாகனமும் ஏற்பாடு செய்யப்படுவதில்லை. மாநக ராட்சி தூய்மை வாகனம் வரும் என்கிற நம்பிக்கையில் வீட் டின் வெளியே வைக்கப்படும் குப்பைகளை தெரு நாய்கள்  அலங்கோலப்படுத்துகிறது. எனவே, மாநகராட்சி நிர்வாகம்  மாநகரம் முழுவதும் உள்ள வீடுகளில் குப்பை சேகரிப்ப தையும் தூய்மை வாகனங்கள் முறையாக கழிவுகளை சேக ரிப்பதையும் முறைப்படுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட் டுள்ளது.

குடிநீர் குழாயில் வந்த இறைச்சி கழிவு  நகர் மன்றத் தலைவர், ஆணையர் நேரில் ஆய்வு

குடிநீர் குழாயில் வந்த இறைச்சி கழிவு  நகர் மன்றத் தலைவர், ஆணையர் நேரில் ஆய்வு மேட்டுப்பாளையம், ஜூன் 18- குடிநீர் குழாயில் வந்த இறைச்சி கழிவு அகற்றப்பட் டதை மேட்டுப்பாளையம் நகர் மன்றத் தலைவர் மற்றும் நக ராட்சி ஆணையர் நேரில் ஆய்வு செய்தனர்.  கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் நகராட்சியில் மொத்தம் 33 வார்டுகள் உள்ளன. இதில், சுமார் 80 ஆயிரத்திற் கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில், நகராட்சிக்கு உட்பட்ட 21 ஆவது வார்டில் உள்ள சாமப்பா  லே அவுட் பகுதியில் விநியோகிக்கப்பட்ட குடிநீர் கடந்த சில  நாட்களாக துர்நாற்றம் வீசியுள்ளது. இதனால், குடிநீரை பயன் படுத்திய இப்பகுதி மக்களுக்கு வாந்தி குமட்டல் ஏற்பட்டது.  இது குறித்து நகராட்சி அலுவலகத்தில் கொடுக்கப்பட்ட புகா ரின் அடிப்படையில் குடிநீர் வழங்கும் வால்வு பகுதி குழாயை அறுத்து சோதனையிட்ட போது அதில் உயிரிழந்து கிடந்த எலி  அல்லது வேறு ஏதேனும் ஒரு சிறிய விலங்கினத்தின் எலும்பு கள் மற்றும் அதன் சதை துணுக்குகள், ரோமங்கள் அடைத்து  கொண்டு இருப்பது தெரிய வந்தது. இதனையடுத்து, இறந்து  பல நாட்களான அதன் எலும்புகள் உள்ளிட்டவைகள் அப்புறப் படுத்தப்பட்டு சுத்தப்படுத்தப்பட்டனர். இதனை, மேட்டுப்பா ளையம் நகர் மன்றத் தலைவர் மெஹரீபா பர்வீன் மற்றும் நக ராட்சி ஆணையர் அமுதா மற்றும் அதிகாரிகள் நேரில் ஆய்வு  செய்தனர். நகராட்சியின் வாட்டர் டேங்குகள் முறையாக சுத்தம் செய்யப்படாததே காரணம் என குற்றம் சாட்டும் இப் பகுதி பொதுமக்கள் இனி இது போன்ற சம்பவங்கள் நடை பெறாமல் இருக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க  வேண்டும் என்றனர்.

ஓட்டல் உரிமையாளரிடம் ரூ.54 லட்சம் மோசடி
ஓட்டல் உரிமையாளரிடம் ரூ.54 லட்சம் மோசடி உதகை, ஜூன் 18-  ஆன்லைனில் முதலீடு செய்தால் கூடுதல் லாபம் தருவ தாக கூறி ஓட்டல் உரிமையாளரிடம் ரூ.54 லட்சம் மோசடி செய் யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  நீலகிரி மாவட்டம், உதகையை சேர்ந்த பெண் ஒருவர்  உதகையில் ஓட்டல் தொழில் நடத்தி வருகிறார். இவர் ஆன் லைன் மூலம் தொழில் வாய்ப்புகள் குறித்து ஆர்வமாக பார்த்து வந்ததாக கூறப்படுகிறது.  இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு இன்ஸ்டாகி ராம் மூலம் இவருக்கு குறுஞ்செய்தி வந்துள்ளது. அதில்,  குறிப்பிட்ட நிறுவனத்தின் பெயரை குறிப்பிட்டு இந்நிறுவனத் தின் பங்குகளில் முதலீடு செய்தால் கூடுதலாகவும், இரட்டிப் பாகவும் வருமானம் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட் டுள்ளது. இதுபோல் பலருக்கும் கூடுதல் லாபம் வழங்கப்பட் டுள்ளது என தெரிவித்துள்ளனர்.  இதை நம்பிய அவர் முதலில் ஒரு லட்சம் முதலீடு செய்து,  ரூ. 2 லட்சம் பெற்றுக் கொண்டார்.  இதனால், ஆசை அதிகரித்த தால் அந்தப் பெண் பல்வேறு தவணைகளாக வங்கி கணக்கு  மூலம் ரூ. 54 லட்சத்து 68 ஆயிரத்தை அனுப்பியுள்ளார். ஆனால், இந்த முறை அவருக்கு கூடுதல் பணம் வரவில்லை.  மேலும், அவர் முதலீடு செய்த பணமும் கிடைக்கவில்லை. இதுகுறித்து, பணம் வாங்கியவர்களையும் அந்த பெண்ணால்  தொடர்பு கொள்ள முடியவில்லை. இதனால், தான் ஏமாற் றப்பட்டதை உணர்ந்தார். இதுகுறித்து நீலகிரி மாவட்ட சைபர்  கிரைம் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில், காவல்  ஆய்வாளர் லட்சுமணதாஸ் தலைமையிலான போலீசார் வழக்கு பதிவு செய்து, பணம் மாற்றப்பட்ட வங்கிக்கு கடிதம்  அனுப்பி வங்கி கணக்கில் பணத்தை மீட்க நடவடிக்கை எடுத்து  வருகின்றனர்.

சுகாதாரமற்ற நிலையில் பேருந்து நிலையம்

ஈரோடு, ஜுன் 18- சுகாதார மற்ற நிலையில் பவானி பேருந்து  நிலையம் உள்ளதால், அடிப்படை வசதிகள் செய்து மேம்படுத்த வேண்டும் என மார்க் சிஸ்ட் கட்சியினர் பவானி நகராட்சி ஆணை யாளரிடம் மனு அளித்தனர்.  ஈரோடு மாவட்டம், பவானி பேருந்து நிலை யத்தில் உள்ள கடைகளுக்கு சாக்கடை வசதி  இல்லை. எனவே, இங்கு கடைகளை வைத்தி ருப்பவர்கள் கழிவு நீரினை பேருந்து நிலைய  வளாகத்திலே கொட்டுகின்றனர். இதனால் பேருந்து நிலையம் சுகாதாரமற்ற நிலையில் உள்ளது. எனவே, பேருந்து நிலையத்தில் வடிகால் வசதியை  சாக்கடை வசதி செய்து  தர வேண்டும். பேருந்து நிலையத்தினுள் கழிப்பிடம் அமைத்து சுகாதாரமாக பராம ரிக்க வேண்டும். மேலும், பல தெருக்களில்  குடிநீர் இணைப்பிற்காக தோண்டப்பட்ட குழி கள் மண்ணால் மூடப்பட்டது. மழையினால் அவை மீண்டும் குழியாகியுள்ளது இதனை  செப்பனிட வேண்டும் என மனு அளித்த னர். முன்னதாக நகராட்சி ஆணையரிடம், சிபிஎம் பவானி நகர கிளைச் செயலாளர் கு. பாலசுந்தரம், தாலுகாச் செயலாளர் எஸ்.மாணிக்கம், மாவட்டக்குழு உறுப்பினர் ஏ. ஜெகநாதன் உள்ளிட்டோர் பங்கேற்று மனு அளித்தனர்.

குழந்தைகள் மீதான வன்முறையை தடுக்க வலியுறுத்தி மாதர் சங்கம் சார்பில் மக்கள் சந்திப்பு பிரச்சாரம்

தருமபுரி, ஜூன் 18- குழந்தைகள் மீதான வன்முறையை  தடுத்து நிறுத்த வேண்டும் என வலியு றுத்தி, அனைத்திந்திய ஜனநாயக மாதர்  சங்கத்தின் சார்பில், தருமபுரியில் மக் கள் சந்திப்பு பிரச்சார இயக்கம் நடை பெற்றது. சமீப காலமாக குழந்தைகள் மீதான  வன்முறை நாள்தோறும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, பெண் குழந்தை கள் மீதான வன்முறை வீடுகளில், பள்ளி களில், பொது இடங்களிலும் ஏதாவது ஒரு நிலையில் வன்முறை சம்பவம் நடந்து வருகிறது. குழந்தைகள் மீதான  வன்முறையை தடுக்க, அரசும், சமூக மும், கூடுதல் பொறுப்போடும் அக்கறை யோடும் செயல்பட வேண்டியுள்ளது. குழந்தைகள் மீதான வன்முறை சம்ப வத்தில் காவல்துறை உரிய சட்டபிரி வின் கீழ் வழக்குப்பதிவு செய்வதும், குற் றாவாளிகளுக்கு தண்டனை கிடைக் கும் வரை தொடர் கவனம் செலுத்துவ தும், மருத்துவ பரிசோதனை அறிக்கை களை உத்தரவாதப்படுத்தி நீதிமன்றத் தில் உரிய ஆவணங்கள் சமர்பிக்க வேண்டும். பாதிக்கப்பட்ட குழந்தைக ளின் குடும்பங்களுக்கு நியாயம் கிடைக் கும் வகையில், காவல்துறை செயல்பட  வேண்டும். மேலும், குழந்தைகள் மீதான வன்முறை நடக்க காரணமாக இருக்கும் போதைப்பொருட்களை முற் றிலுமாக ஒழிக்க வேண்டும். பள்ளிகளில் ஆசிரியர்களுக்கு பாலி யல் கல்வி குறித்து சிறப்பு பயிற்சி அளிக்க வேண்டும். தமிழ்நாட்டில் குழந்தைகள் நல  ஆணையத்திற்கு தலைவரை உடனடி யாக நியமிக்க வேண்டும். குழந்தைகள்  மகிழ்ச்சியாக வாழ அரசும், பெற்றோ ரும், சமூகமும் இணைந்து குரல் எழுப்ப  வேண்டும் என அழைப்பு விடுத்து, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங் கத்தின் சார்பில் தருமபுரி மாவட்டம் முழு வதும் ஜூன் 17 முதல் 22 ஆம் தேதி வரை  மக்கள் சந்திப்பு பிரச்சார இயக்கம் நடை பெற்று வருகிறது. அதன் ஒரு பகுதி யாக தருமபுரி பேருந்து நிலையத்தில் நடைபெற்ற இயக்கத்திற்கு, மாதர் சங்க  மாவட்டத் தலைவர் ஏ.ஜெயா தலைமை  வகித்தார். இதில் மாவட்டச் செயலாளர்  ஆர்.மல்லிகா, முன்னாள் மாவட்டச் செயலாளர் எஸ்.கிரைஸாமேரி, மாவட்ட நிர்வாகிகள் கே.பூபதி, கே. சுசிலா, தருமபுரி ஒன்றியச் செயலாளர் எம்.மீனாட்சி, ஆகியோர் கலந்து கொண்டனர்.

அழுகிய நிலையில் ஆண் சடலம் மீட்பு
 

அழுகிய நிலையில் ஆண் சடலம் மீட்பு சேலம், ஜூன் 18- சேலம் மாவட்டம், கொண்டலாம்பட்டி அருகே பட்டர் பிளை பாலம் உள்ளது. ஈரோடு, கோவை மார்க்கமாக செல் லும் பேருந்துகள் இறங்கும் இடத்தில் உள்ள இப்பாலத் துக்கு அடியில் கழிவுநீர் ஓடை செல்கிறது. இந்நிலையில், அவ்வழியாக சென்ற ஒருவர், கழிவுநீர் ஓடையில் சுமார் 40  வயது மதிக்கத்தக்க நபரின் சடலம் மிதப்பதைக் கண்டு  அதிர்ச்சியடைந்துள்ளார். இதுகுறித்து அவர் அன்னதா னப்பட்டி காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் அன்னதானப்பட்டி குற்றப்பிரிவு காவல் ஆய்வா ளர் சின்ன தங்கம் மற்றும் உதவி ஆய்வாளர் வெற்றி, காவ லர்கள் சம்பவ இடத்திற்கு வந்தனர். அப்போது சடலம்  ஆழமான பகுதியில் இருந்ததால், சூரமங்கலம் தீயனைப்பு  துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அங்கு வந்த தீயணைப்பு துறையினர் மற்றும் மாநகராட்சி ஊழி யர்கள் இணைந்து, ஒரு மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு  சடலத்தை மீட்டனர். உடல் அழுகிய நிலையில் இருந்ததால்  அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்த விபரம்  தெரியவில்லை. மேலும், மது போதையில் விழுந்தாரா? அல்லது யாரேனும் கொலை செய்துவிட்டு கழிவுநீர் ஓடை யில் வீசி விட்டு சென்றார்களா? என்பது குறித்து காவல்துறை யினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரு கின்றனர்.

சிறுமிகள் மீது பாலியல் வன்முறை  குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம்

சிறுமிகள் மீது பாலியல் வன்முறை  குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் உடுமலை, ஜூன் 18- உடுமலை பகுதியைச் சேர்ந்த இரண்டு சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடர்பு டையவர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டையைச் சேர்ந்த  17 வயது சிறுமி தனது தாத்தா, பாட்டி வீட்டில் வசித்து வரு கிறார். கடந்த சில நாட்களாக சிறுமியின் உடல்நிலையில் மாற்றம் ஏற்பட்டது. இதையடுத்து சிறுமியை அங்குள்ள மருத் துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதனை செய்த னர். அப்போது சிறுமி 4 மாதம் கர்ப்பமாக இருப்பது தெரிய வந்தது. இதனால், அதிர்ச்சியடைந்த சிறுமியின் உறவினர் கள், அவரிடம் விசாரித்த போது 3 சிறுவர்கள் உட்பட 9 பேர்  தன்னை அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த தாக தெரிவித்தார். இச்சம்பவம் குறித்து, உடுமலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். ஆனால், உரிய வழக்கு பதிவு செய்யப்படாமல் காவல்துறையினர் காலம் தாழ்த்தியதை அறிந்து, மார்க்சிஸ்ட் கட்சி, அனைத் திந்திய ஜனநாயக மாதர் சங்கம் உள்ளிட்ட இயக்கங்கள் தலையீடு செய்து, உரிய அழுத்தத்தை ஏற்படுத்தினர். இதனையடுத்து, தமிழகத்தையே உலுக்கிய இச்சம்ப வத்தில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீ சார், ஜெய காளீஸ்வரன்( 19), மதன்குமார்( 19), பரணி குமார் ( 21), பிரகாஷ் (24), நந்தகோபால் ( 19 ), பவா பாரதி (22), மற்றும் 14, 15 மற்றும் 16 வயதுடை 3 சிறுவர்கள் உட்பட 9 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், வழக்கு தொடர் புடைய உடுமலை  சத்திரம் வீதியில் உள்ள சிவா லாட்ஜ் சீல்  வைக்கப்பட்டது. அதன் மேலாளர் சாமுவேல் (60) என்பவரை  ோலீசார் கைது செய்தனர்.  இந்நிலையில் குற்றவாளிகள் ஜெயகாளீஸ்வன் (18), மதன்குமார் (19), பரணிகுமார்(21), யுவபிரகாஷ் (24), நந்தகோபால்(19), பவா பாரதி (22) ஆகிய 6  பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

குடியிருப்பை சூழ்ந்த கழிவுநீர் அகற்றம்

குடியிருப்பை சூழ்ந்த கழிவுநீர் அகற்றம் சேலம், ஜூன் 18– அயோத்தியப்பட்டினம் அருகே குடியிருப்பை சூழ்ந்த கழிவுநீரை, உடனடியாக அகற்றிய ஊராட்சி நிர்வாகத்திற்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர். சேலம் மாவட்டம், அயோத்தியபட்டினம் ஊராட்சி ஒன்றி யம், அதிகாரப்பட்டி சிற்றூராட்சி பகுதிக்குட்பட்ட அம்பேத்கர்  காலனி, பாலாஜி நகர், மூன்றாவது வார்டு பகுதியில் ஏராள மான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்க ளுக்கு அரசு அடிப்படை வசதிகளை மேம்படுத்தி தரவில்லை.  குறிப்பாக, கடந்த 8 மாத காலமாக சரியான முறையில் சாக் கடை கால்வாய் பணிகளை சீரமைக்காததால், மழைக்காலங் களில் தண்ணீர் தேங்கி அருகிலுள்ள குடியிருப்பு பகுதிக் குள் வந்து தேங்கியுள்ளதாகவும் பொதுமக்கள் குற்றஞ்சாட்டி யுள்ளனர். தற்போது பருவமழை தொடங்கியுள்ள காலத் தில் சாக்கடை கால்வாய்களை உடனடியாக சீரமைத்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து அயோத்தியப்பட்டினம் ஊராட்சி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உரிய விசாரணை மேற்கொண்டு, உடனடியாக சாக்கடை கால்வாய் பணியை சீரமைக்க நடவ டிக்கை மேற்கொண்டனர். ஊராட்சி தூய்மைப் பணியாளர் கள் சம்பந்தப்பட்ட பாலாஜி நகர் பகுதியில் சுகாதாரப் பணி களை மேற்கொண்டு, சாக்கடை கால்வாய் பகுதியில் தேங் கிய கழிவுநீரை அகற்றி தூய்மைப்படுத்தினர். அதிகாரி களின் உடனடி நடவடிக்கையால் மகிழ்ச்சியடைந்த பொது மக்கள், அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்தனர்.

ஆட்சியர் முகாம் அலுவலகத்தில் கரடிகள் உலா
ஆட்சியர் முகாம் அலுவலகத்தில் கரடிகள் உலா உதகை, ஜூன் 18- நீலகிரி மாவட்ட ஆட்சியர் முகாம் அலுவலகத்தில் 2  கரடிகள் உலா வந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.  உதகையை ஒட்டிய தொட்டபெட்டா, கவர்னர் சோலை, கேர்ன்ஹில் உள்ளிட்ட அடர்ந்த வனப்பகுதிகள் உள்ளன. 65 சதவீதம் வனப்பகுதியாக இருப்பதால் இங்கு கரடி, காட்டெ ருமை, சிறுத்தை, கடமான் போன்ற வனவிலங்குகள் உள்ளன.  கடந்த சில மாதங்களாக வனப்பகுதியில் இருந்து உணவு மற் றும் தண்ணீரை தேடி வனவிலங்குகள் குடியிருப்புகளுக்குள்  புகுந்து வருவது தொடர் நிகழ்வாக உள்ளது. இந்நிலையில், திங்களன்று இரவு உதகை தமிழகம் சாலையில் உள்ள ஆட்சி யர் முகாம் அலுவலக சுற்றுச்சுவரில் 2 கரடிகள் மெதுவாக குதித்து நடந்து, முகாம் அலுவலக வளாகத்தில் சுற்றித் திரி கின்றன. இதன் பின்னர் ஒன்றன்பின் ஒன்றாக அந்தக் கரடி கள் தமிழகம் சாலை வழியாக வெளியே சென்று வனப் பகுதிக்குள் சென்று விட்டன.  இதுகுறித்து அப்பகுதியினர் கூறுகையில், உதகை தமிழ கம் மாளிகை மற்றும் மாவட்ட ஆட்சியர் முகாம் அலுவலகம் உள்ளது. இவ்வளவு முக்கிய இடமாக இருந்தும் கடந்த சில மாதங்களாக இந்த பகுதியில் சிறுத்தை நடமாட்டம் உள்ளது.  இரவு நேரங்களில் இந்த வழியாக வரவே அச்சம் ஏற்படுகிறது. வன விலங்குகள் ஊருக்குள் வருவதை தடுக்க வனத்துறை யினர் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த கரடிகளை பிடித்து, அடர்ந்த வனப்பகுதிக்குள்விட நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

வலுக்கட்டாயமாக பணம் பறிக்கும் தனியார் பள்ளி: ஆட்சியரிடம் புகார்

வலுக்கட்டாயமாக பணம் பறிக்கும் தனியார் பள்ளி: ஆட்சியரிடம் புகார் கோவை, ஜூன் 18- பொள்ளாச்சியில் தனியார் பள்ளியில் ஆர்டிஇ மாண வர்களிடமும் வலுக்கட்டாயமாக கட்டணம் வசூலிப்பதாக பெற்றோர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.  கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே உள்ள கோட்டம்பட்டியில் ஸ்ரீ லதாங்கி வித்யா மந்திர் என்ற தனியார் பள்ளி இயங்கி வருகிறது. இங்கு இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் (RTE) கீழ் மாணவர்கள் சிலர் பயின்று வரு கின்றனர். இந்நிலையில், அம்மாணவர்கள் ஆய்வக வகுப்பு களுக்கு கட்டணம் செலுத்த வேண்டுமென நிர்பந்திப்பதாக வும் கட்டணம் செலுத்தவில்லை என்றால் பள்ளிக்கு அனுப்ப வேண்டாம் என குறுஞ்செய்தி அனுப்புவதாகவும் மாவட்ட  நிர்வாகம் இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டு மென கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாணவர் களின் பெற்றோர்கள் மனு அளித்தனர்.

 


 

 

 

;