கோவை, நவ.18- வ.உ.சிதம்பரனாரின் 87 ஆவது நினைவுநாளையொட்டி அவரது சிலைக்கு மாலை அணிவித்து மார்க் சிஸ்ட் கட்சியின் சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. விடுதலைப் போராட்ட வீரர், செக் கிழுத்த செம்மல், கப்பலோட்டிய தமி ழன், ஏகாதிபத்திய எதிர்ப்பு போராளி வ.உ.சிதம்பரனாரின் 87 ஆவது நினைவு நாள் நவ.18 சனியன்று தமிழ்நாடு முழு வதும் அனுசரிக்கப்பட்டது. இதன்தொ டர்ச்சியாக கோவை வ.உ.சி மைதா னத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள வ.உ.சி திருவுருவச்சிலைக்கு மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் சிஐடியு தொழிற்சங்கம் சார்பில் மாலை அணி வித்து மரியாதை செலுத்தினர். இதில், பி.ஆர்.நடராஜன் எம்பி., சிபிஎம் மாவட்டச் செயலாளர் சி.பத்ம நாபன், சிஐடியு மாவட்டச் செயலாளர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி, சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கே.மனோ கரன், யு.கே.சிவஞானம், கே.அஜய் குமார், கே.எஸ்.கனகராஜ், என்.ஆர். முருகேசன், ஆறுச்சாமி, மாவட்டக் குழு உறுப்பினர்கள் என்.ஜாகீர், என். செல்வராஜ், தினேஷ் ராஜா உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.