districts

img

காந்தி பிறந்த நாளில் ஏழு மையங்களில் மனித சங்கிலி

திருப்பூர், செப். 28 - திருப்பூர் மாவட்டத்தில் ஏழு மையங்க ளில் மதவெறிக்கு எதிராகவும், மக்கள் ஒற்று மையை வலியுறுத்தியும் மனித சங்கிலி இயக் கம் நடத்துவது என்று மார்க்சிஸ்ட் கட்சி, இந் திய கம்யூனிஸ்ட் மற்றும் விடுதலை சிறுத்தை கள் கட்சி கூட்டாக முடிவு செய்துள்ளன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய  கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தை கட்சி  ஆகியவற்றின் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் புதன்கிழமை இந்திய கம்யூ னிஸ்ட் கட்சியின் மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாவட்டச் செயலாளர் செ.முத்துக்கண் ணன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத் தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் சி. மூர்த்தி, டி.ஜெயபால், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநகர் மாவட்ட செயலாளர் எஸ். ரவிச்சந்திரன், புறநகர் மாவட்ட செயலாளர்  கே.எம்.இசாக், புறநகர் மாவட்ட பொருளா ளர் வி.பி.பழனிசாமி, விடுதலை சிறுத்தை கட் சிகளின் திருப்பூர் கிழக்கு மாவட்ட செயலா ளர் தமிழ்முத்து, திருப்பூர் வடக்கு மாவட்ட செயலாளர் தமிழ்வேந்தன், திருப்பூர் தெற்கு  பொறுப்பாளர் சதீஷ்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானம் நிறை வேற்றப்பட்டது. அண்மைக் காலமாக தமிழ கத்தில் வெறுப்பு அரசியலை விதைத்து வன் முறைகளை தூண்டி பதற்றத்தை ஏற்படுத் தும் வகையில் பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் தலைமையிலான சங்பரிவார் அமைப்புகள் திட்டமிட்டு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. தற்போது கோவையை மையப்படுத்தி இந்த முயற்சிகள் முனைப் புடன் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந் நிலையில் கடந்த சில நாட்களாக ஆங்காங்கே  பெட்ரோல் குண்டு வீச்சுகளும் நடைபெற்று வருகின்றன. இவற்றிற்கு காரணமான அனை வரையும் காவல்துறை விரைந்து கைது செய்து சிறைப்படுத்த வேண்டும். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் விடுத்துள்ள அறிக் கையில் நச்சு அரசியலுக்கு இடமளிக்க வேண் டாமென தமிழக மக்களை கேட்டுக் கொண் டுள்ளார்.

மேலும் தமிழகத்தின் அமைதியையும், நல்லிணக்கத்தையும் பாதுகாக்க மாநில அரசு  உரிய நடவடிக்கைகளை எடுத்து வருவதா கவும் தெரிவித்துள்ளார். இதனையும் வர வேற்கிறோம். அத்துடன் மதரீதியில் மக்க ளைப் பிளவுபடுத்தும் சங் பரிவார்களின் முயற்சிகளைப் புறக்கணிப்பதோடு, அவற்றை முறியடிக்க முன் வர வேண்டு மென்றும், எவ்வித ஆத்திரமூட்டலுக்கும் இரையாகி விடக் கூடாது என்றும் பொது மக் களை கேட்டுக் கொள்கின்றோம். தேசத் தந்தை மகாத்மா காந்தியின் பிறந்த  நாளை தேர்வு செய்து, தமிழகத்தில் 50 இடங் களில் அணிவகுப்பு நடத்தப்போவதாக ஆர். எஸ்.எஸ் அறிவித்திருக்கிறது. காந்தியடி களை படுகொலை செய்த குற்றச்சாட்டுக்கு  ஆளான ஆர்எஸ்எஸ் இத்தகைய நடவடிக் கையில் ஈடுபடுவது அரசியல் உள்நோக்கம்  கொண்டதாகும். மேலும் அவர்கள் அணிவ குப்பு நடத்துவதற்கு அனுமதியளிக்கும்படி தமிழக காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் வழிகாட்டுதலைத் தந்திருப்பது அதிர்ச்சி யளிக்கிறது. இந்த நிலையில் சங்பரிவாரின் இந்த  மக்கள் விரோதப் போக்கைக் கண்டிக்கிற வகையிலும், தமிழகத்தில் மதவெறிக்கு எதி ராகவும், வன்முறைக்கு எதிராகவும், மக்கள்  ஒற்றுமையை வலியுறுத்தியும் அக்டோபர் 2ஆம் தேதி காந்தி ஜெயந்தி அன்று தமிழகம்  முழுவதும் நூற்றுக்கணக்கான இடங்களில், மனித சங்கிலி இயக்கம் நடத்துவது என்று  முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த முடிவின் படி திருப்பூர் மாவட்டத்தில் 7 மையங்களில் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது. திருப்பூர் மாநகரம், அவிநாசி, ஊத்துத் குளி, காங்கயம், தாராபுரம், உடுமலை, பல்லடம் ஆகிய இடங்களில் நடத்துவது  என் றும்  முடிவு செய்யப்பட்டது. மதச்சார்பற்ற சக்தி களும், அமைதியை விரும்பும் அனைத்து தரப்பினரும் மனித சங்கிலி இயக்கத்தில் பங்கு பெற வேண்டுமாறும் கேட்டுக் கொண்டுள்ளனர்.