கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் 151 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, கோவை மத்திய சிறையில் வஉசி இழுந்த செக்கிற்கு தமிழக மின்சாரத்துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி மலர்தூரி மரியாதை செலுத்தினார். இதில், மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன், மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார், சிறைகள் மற்றும் சீர்திருத்தப்பணிகள் துறை கோவை சரக துணைத்தலைவர் க.சண்முகசுந்தரம், சிறைச்சாலை கண்காணிப்பாளர் எம்.ஊர்மிளா ஆகியோர் உடனிருந்தனர்.