பொள்ளாச்சி, டிச.20- பொள்ளாச்சி அருகே உள்ள சேரிபாளையம் அரசுப் பள்ளி மாணவர்கள் 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, பள்ளிக்கு மூன்று நாட் கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே உள்ள சேரி பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் சுமார் 750க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில், இந்த பள்ளியில் உள்ள மாணவ, மாணவிகளுக்கு நல்லட்டிபாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ பணியாளர்கள் கொரோனா பரிசோதனை மேற்கொண்டனர். கடந்த சிலநாட்களுக்கு முன்பு எடுத்த கொரோனா பரிசோதனையில் 3 மாண விகள் உட்பட 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய் யப்பட்ட நிலையில், 2 ஆம் கட்டமாக 10, 11, 12 ஆகிய வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு கொரோனா பரி சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில், மேலும் 2 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப் பட்டது. இதனால், பள்ளிக்கு திங்களன்று முதல் 3 நாட் களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.