districts

கொத்தடிமைபோல் வேலை வாங்குகிறார்கள்

உதகை, செப்.12 -  குன்னூர் அரசு மருத்துவமனை யில் 12 மணிநேரத்திற்கும் மேலாக செவிலியர்களிடம் வேலை வாங்கு வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.  நீலகிரி மாவட்டம், குன்னூ ரில் அமைந்துள்ள அரசு மருத்து வமனையில் 50க்கும் மேற்பட்ட செவிலியர்களும், நூற்றுக்கும் மேற்பட்ட ஒப்பந்த பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். நாள் ஒன்றுக்கு மூன்று ஷிஃப்டுகள் என்ற அடிப்படையில் இவர்கள் பணியமர்த்தப்பட்டு மருத்துவ சேவை செய்து வந்தனர். இந்நி லையில், கடந்த 6 மாதங்களாக செவிலியர்கள் மற்றும் ஒப்பந்த தொழிலாளர்களிடம் அதிகமான வேலை வாங்குவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.  இதுகுறித்து அம்மருத்துவமனை யில் பணியாற்றும் செவிலியர்கள் கூறுகையில், National Quality Assesment Scheme எனும் ஒன்றிய அரசின் திட்டத்தை அமல் படுத்துவதற்காக கடுமையாக வேலை வாங்குகின்றனர்.

செவிலி யர் தொழிலே சேவை செய்வதற் காகத்தான் நாங்களும் வந்துள் ளோம். ஆனால், நாங்கள் இயந்தி ரங்கள் இல்லையே, மனசாட்சியே இல்லாமல்  வேலை வாங்கப்படு கிறது. ஷிஃப்ட் அடிப்படையிலான பணி முறை மாற்றப்பட்டு காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை தொடர்ச்சியாக பணியமர்த்தப்படு தப்படுகிறது. இதுகுறித்து கேள்வி எழுப்பினால் குன்னூர் அரசு மருத் துவமனை நிர்வாகம், இரக்க மில்லாமல் ஊழியர்களை வேலை வாங்குவதோடு, கேள்விகேட்ப வர்களை இடமாற்றம் செய்து விடுவதாக மிரட்டுகின்றனர். அப் படித்தான் வேலை வாங்குவோம், வேண்டும் என்றால் இருங்கள் இல்லையேல் புறப்படுங்கள் என்கின்றனர். சுமார் 12 மணி நேர வேலைக்கு பயந்தும், மன அழுத்தத்தினாலும் செவிலியர்கள் பலர் நீண்ட நாட்கள் விடுப்பு எடுத்து செல்கின்றனர். மேலும், தொடர்ச்சியான பணிச்சூழல் காரணமாக செவிலியர்கள் மற்றும் ஊழியர்களின் குடும்பங்களில் பல பிரச்சினைகள் ஏற்படுகிறது என்றனர். ஒன்றிய அரசின் திட்டத்தை அமல்படுத்த தீவிரம் காட்டும் நிர்வாகம், ஊழியர்களின் நலனில் அக்கறை காட்டுவதில்லை. இப்பணிகளிலிருந்து மருத்துவர்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளதோடு, அதிக வேலை செய்தாலும் சம்பளம் உயர்த்தப்படவில்லை என குன்னூர் அரசு மருத்துவமனை செவிலியர்கள் மற்றும் ஊழியர்கள் தெரிவிக்கின்றனர். தமிழக அரசும், உதகை மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட வேண்டும் என்கிற கோரிக்கை செவிலியர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

;