நாமக்கல், ஜூலை 19- 6,737 ரூபாய்க்கு ஐந்து ஆண்டு களுக்கு ரூ.89,673 வட்டி வசூலிக் கப்பட்ட நிலையில், பாதிக்கப்பட்ட வங்கி வாடிக்கையாளருக்கு ரூ.1.64 லட்சம் வழங்க வேண்டும் என நாமக் கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கோவை மாவட்டம், பொள்ளாச் சியில் உயிர் டிராவல்ஸ் என்ற நிறு வனத்தை நடத்தி வருபவர் கந்த சாமி மகன் சாந்தகுமார் (56). இவர் தொழிலுக்காக கார்ப்பரேசன் வங் கியில் நடப்பு கணக்கு வைத்துள் ளார். வங்கி இவருக்கு கிரெடிட் கார்டு வழங்கியுள்ளது. கடந்த 2017 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் இவ ரது கணக்கில் ரூ.1,71,898 இருந்துள் ளது. இவர் தொழில் தொடர்பாக ஒரு நிறுவனத்துக்கு ரூ.1.50 லட்சத்திற்கு காசோலையை வழங்கியுள்ளார். ஆனால், அந்த காசோலைக்கு பணம் வழங்க சாந்தகுமாரின் வங்கி கணக் கில் பணம் இல்லை என்று வங்கி கூறியுள்ளது. இதனால் அதிர்ச்சிய டைந்த சாந்தகுமார், வங்கி கணக்கு அறிக்கையை பெற்று பார்த்தபோது, 2012 ஆம் ஆண்டில் தமது கிரெடிட் கார்டில் செலுத்த வேண்டிய தொகை ரூ.6,737-க்கு, வட்டியுடன் அவரது கணக்கில் 2017 டிசம்பர் முதல் வாரத் தில் ரூ.96,410யை வங்கி பிடித்தம் செய்துள்ளது தெரியவந்தது. மேலும், செலுத்த வேண்டிய தொகை ரூ.6,737-க்கு, 2012 ஜூலை முதல் 2017 நவம்பர் வரை ஐந்து ஆண்டுகள், ஐந்து மாதங்களுக்கு வட்டியாக ரூ.89,673யை அவரது கணக்கிலி ருந்து எடுத்துக்கொண்டது குறித்து, வங்கியில் கேட்டபோது அவருக்கு சரியான பதில் இல்லை. இதனால் பாதிப்புக்குள்ளான சாந்தகுமார்,
கடந்த 2018 ஆம் ஆண் டில் கோவை நுகர்வோர் நீதிமன்றத் தில் வங்கியின் மீது வழக்கு தாக்கல் செய்திருந்தார். விரைவான விசார ணைக்கு கடந்த ஜூலை மாதம் நாமக் கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத் திற்கு மாற்றப்பட்ட இந்த வழக்கில் நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதி பதி வீ.ராமராஜ் தீர்ப்பு வழங்கினார். அதில், வாடிக்கையாளர் செலுத்த வேண்டிய தொகைக்கு சுமார் 14 மடங்கு வட்டியை 6 ஆண்டுகளில் விதித்து, அதனை அவரது வங்கிக் கணக்கில் இருந்து வங்கி எடுத்துக் கொண்டது நேர்மையற்ற வணிக நடைமுறையாகும். பாதிப்புக்குள் ளான வாடிக்கையாளரது அவரது கணக்கிலிருந்து பிடித்தம் செய்த ரூ.96,410லிருந்து கிரெடிட் கார்டுக்கு செலுத்த வேண்டிய தொகை ரூ.6,737 மற்றும் இந்த பணத்திற்கு ஆண் டொன்றுக்கு ஆறு சதவிகித வட்டி மட்டும் எடுத்துக்கொண்டு, மீத தொகையான சுமார் ரூ.85 ஆயிரம் மற்றும் இந்த தொகைக்கு 2017 டிசம்பர் முதல் பணம் வழங்கப்படும் நாள் வரை ஆண்டொன்றுக்கு ஆறு சதவிகித வட்டி சேர்த்து (தற்போது வரை சுமார் ரூ.29 ஆயிரம்) வழங்க வேண்டும். அந்த தொகையினை நான்கு வார காலத்திற்குள் வழங்க வேண் டும் என தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. இதனைத்தவிர வங்கியின் சேவை குறைபாட்டால் ஏற்பட்ட சிரமங்க ளுக்கு வாடிக்கையாளருக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்கவும் நாமக் கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.