districts

img

சாலையோரத்தில் கொட்டப்படும் கட்டுமானக் கழிவுகள் : நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

கோவை, டிச. 7 – கோவை தண்ணீர் பந்தல் அருகே சாலை யோரத்தில் கட்டுமானக் கழிவுகளை கொட்டுவதால் சுகாதார சீர்கேடு ஏற்படுவ தாக அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டி யுள்ளனர். கோவை தண்ணீர் பந்தலையொட்டி வினோபாஜி நகரை அடுத்து அமைந்துள் ளது கௌதமபுரி நகர். இப்பகுதியினைச் சுற்றி பெரும்பாலும் பல கட்டுமான தனி யார் நிறுவனங்கள் அமைந்துள்ளன. இந் நிறுவனங்கள் தேவையற்ற கட்டுமானக் கழிவுகளான செங்கல், சிமெண்ட் உள்ளிட் டவற்றை அப்பகுதியைச் சுற்றிலுள்ள சாலைகளில் கொட்டி வருகின்றனர். ஏற்க னவே அந்த சாலை மிகவும் குறுகலாக இருப்பதால் அப்பகுதி வாகன ஒட்டிக ளுக்கும், குடியிருப்பு வாசிகளுகும் பெரும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.

இதுகுறித்து அப்பகுதிப் பொதுமக்கள் கூறுகையில், இந்நிகழ்வு பல வருடங்களாக நடந்து வருகிறது. இதுதொடர்பாக, மாநக ராட்சி நிர்வாகத்திற்கு பலமுறை தெரியப் படுத்தியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, இந்த கட்டு மான குப்பைகளை உடனடியாக அகற்ற வேண்டும். இதனை கொட்டும் தனியார்  நிறுவனத்தின மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத் துள்ளனர்.

;