சேலம், அக்.7- பட்டு வளர்ச்சித்துறை நிர்வா கத்தால் மேற்கொள்ளப்படும் ஊழியர் விரோத போக்கினை கை விட வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு பட்டு வளர்ச்சித்துறை ஊழியர் சங்கத்தின் சார்பில் பெருந் திரள் முறையீடு நடைபெற்றது. தமிழ்நாடு பட்டு வளர்ச்சித் துறையில் இளநிலை ஆய்வாளர் உள்ளிட்ட அனைத்து காலி பணியி டங்களையும் உடனடியாக நிரப்ப வேண்டும். ஊழியர் பற்றாக் குறையால் களப் பணியாளர்கள் கடுமையான பணி நெருக்கடி சூழலில் பணிபுரிந்து வரும் நிலையில், நிர்வாகத்தால் மேற் கொள்ளப்படும் ஊழியர் விரோத போக்கினை கைவிட வேண்டும். குற்ற குறிப்பானைகள், பழிவாங்கும் மாறுதல்கள் போன்ற நடவடிக்கை கள் மூலம் ஊழியர்களை மன உளைச்சல் மற்றும் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கும் போக்கினை கைவிட வேண்டும். பட்டு பண்ணைகளின் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தாமல், இலக்குகளை மட்டுமே இரட்டிப்பாக்கியதை கை விட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி தமிழ்நாடு பட்டு வளர்ச்சித்துறை ஊழியர் சங்கத் தின் சார்பில் பெருந்திரள் முறையீடு நடைபெற்றது. சேலம் அஸ்தம்பட்டி பட்டு வளர்ச்சி துறை இயக்குனர் அலுவ லகம் முன்பு நடைபெற்ற போராட் டத்திற்கு சங்கத்தின் மாநிலத் தலைவர் வே.வெங்கடேஷ் தலைமை வகித்தார். போராட் டத்தை துவக்கி வைத்து தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநில துணை பொதுச்செயலாளர் மு.சீனி வாசன் உரையாற்றினார். கோரிக்கை களை விளக்கி சங்கத்தின் பொதுச் செயலாளர் நா.சுரேஷ் குமார் பேசி னார். இதில், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் பி.சுரேஷ், பட்டு வளர்ச்சித்துறை ஊழியர் சங்க முன்னாள் மாநில பொதுச் செயலாளர் பி.கோவிந்தசாமி, மாவட்ட செயலாளர் சந்தோஷ் குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். முடிவில், பட்டு வளர்ச்சித்துறை இயக்குனரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.