தருமபுரி, மே 16- தோழர் என்.முத்துவின் 15 ஆம் ஆண்டு நினைவு தினம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அனுசரிக்கப்பட்டது. முதுபெரும் கம்யூனிஸ்ட் தலைவர் தோழர் என்.முத்து அவர்களின் 15 ஆம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்ச்சி தருமபுரி ஒன் றியம், செம்மாண்டகுப்பம் பகுதியிலுள்ள அவரது நினைவிடத்தில் நடைபெற்றது. இந்நி கழ்ச்சிக்கு முத்து அறக்கட்டளை தலைவர் வி.மாதன் தலைமை வகித்தார். அறக்கட் டளை செயலாளர் ஜி.வெங்கட்ராமன் முன் னிலை வகித்தார். சிபிஎம் மாவட்டச் செயலா ளர் ஏ.குமார், மூத்த தலைவர் பி.இளம்ப ரிதி, கிருஷ்ணகிரி மாவட்டத் தலைவர்கள் கே.நாகராஜரெட்டி, டி.எஸ்.பாண்டியன், திம் மாரெட்டி, சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினர் ரா.சிசுபாலன், மாவட்ட செயற்குழு உறுப்பி னர்கள் சோ.அருச்சுணன், வே.விசுவநாதன், கிருஷ்ணகிரி மாவட்ட செயற்குழு உறுப்பி னர் சி.பிரகாஷ் ஆகியோர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர். நிறைவில், அறக்கட் டளை சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப் பட்டன. இதில் முத்து அறக்கட்டளை நிர்வாகி கள் பி.ராமன், இ.பி.பெருமாள், எம்.கல்யா ணசுந்தரம், எம்.மீனாட்சி, எம்.கோவிந்தன், சிபிஎம் மாவட்டக்குழு உறுப்பினர்கள் கே. என்.மல்லையன், ஏ.ஜெயா, என்.பி.முருகன், சி.ராஜி உள்ளிட்ட பலர் கலந்து கொண்ட னர். முடிவில், அறக்கட்டளை பொருளாளர் என்.கந்தசாமி நன்றி கூறினார்.