districts

img

தோழர் கே.எஸ்.கே. காட்டிய வழியில்... - ச.நந்தகோபால்

சுமார் 150 ஆண்டுகள் பாரம் பரியம் மிக்க திருப்பூர் - அனுப்பர் பாளையம் பாத்திரத் தொழில் இன் றைக்கும் பெயர் பெற்று விளங்கி வருகிறது. இங்குள்ள பாத்திரப் பட் டறைகளில் உலோகங்களோடு மல் லுக்கட்டி, பளபளக்கும் பாத்திரங் களை உருவாக்கிய தொழிலாளர் களின் வாழ்க்கை இருளடைந்து கிடந்தது. ஆயிரக்கணக்கான தொழிலா ளர்களை ஒன்றுதிரட்டி சிஐடியு சங்கம் அமைத்து, பைசா கணக்கில் இருந்த கூலியை, சங்கத்தின் தொடர் போராட்டங்களின் விளை வாக சதவீதக் கணக்குக்கு மாற்றி யது குறிப்பிடத்தக்க வெற்றியாகும். பித்தளை, செம்பு, எவர்சில்வர் என  ஒவ்வொரு பாத்திரத்துக்கும் தனித் தனி சங்கங்களாக இருந்ததை ஒரே அமைப்பாக மாற்றியது; தீபாவளி போனசாக வேட்டி, துண்டு மட்டுமே கொடுத்ததை மாற்றி சதவீத அடிப்ப டையில் போனஸ் பெறப்பட்டதும் முக்கியமானது. மேற்கண்டவாறு வேலைக் கேற்ற கூலியை, சட்டப்படியான உரி மைகளைப் பெற்றுத் தந்ததோடு, தொழிலாளர்களுக்கு வர்க்க அரசியலை சொல்லிக் கொடுத்து வளர்த்தெடுத்தவர் தோழர் கே.எஸ். கருப்பசாமி. தொழிலாளர்களின் உரிமையைப் பெற்றுக் கொடுக்கும் அதேநேரத்தில், தொழில் பாதிக் கப்படும் போதெல்லாம் பாத்திர உற்பத்தியாளர்களுடன் இணைந்து  நின்று தொழிலைப் பாதுகாக்கவும் முன்னின்றது சிஐடியு. தோழர் கே.எஸ்.கே. வளர்த்தெடுத்த சிஐ டியு சங்கம் இன்றைக்கும் தொழிலா ளர்களின் முன்னணி சங்கமாகத் திகழ்ந்து வருகிறது.

வேலம்பாளையம் பேரூராட்சி யின் முன்னாள் தலைவர் ஆர்.பொன்னுசாமியின் தன்னலமற்ற மக்கள் சேவை இன்றைக்கும் நினைவுகூரத்தக்கது. 1990 இல்  ரூ.10 ஆயிரம்/- வைப்புத்தொகை செலுத்தினால், வேலம்பாளையம் பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைந்திட வாய்ப்புள் ளது என அறிந்து, ஆர்.பொன்னு சாமி, வி.பி.சுப்பிரமணியம் (முன் னாள் நகரச் செயலாளர்) ஆகியோர் இரவோடு இரவாக பல்வேறு தோழர்களின் வீடு வீடாகச் சென்று, அன்றைக்கிருந்த பொருளாதார நிலைமையில் அப்பெருந் தொகையைச் சேகரித்து, வைப்புத்  தொகையாகச் செலுத்தி, அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தைக் கொண்டு வந்துள்ளனர். ஆயிரக் கணக்கான மக்கள் பயன்பெறும் வகையில் இன்றைக்கு அது 60 படுக்கை வசதிகள் கொண்ட அரசு மருத்துவமனையாகத் தரம் உயர்த் தப்பட்டுள்ளது என்பது பெருமைக் குரிய நிகழ்வாகும்.

2014 ஆம் ஆண்டு பாத்திரத் தொழிலாளி ஒருவர், கந்து வட்டிக்  கொடுமையினால் மூன்று குழந்தை களையும், மனைவியையும் தவிக்க விட்டு தற்கொலை செய்து கொண் டார். அன்றைய கட்சியின் நகரச் செயலாளர் கே.ரங்கராஜ், கந்து வட்டிக் கும்பல்களின் கொடுமை களைத் தடுத்திட வலியுறுத்தி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தோடு, சிஐடியு தொழிற் சங்கத்தையும் இணைத்து அனுப்பர் பாளையம் பகுதியில் கண்டன இயக்கங்களும், ஊர்வலங்களும் தொடர்ந்து நடத்தியது, ஊடகங் களில் சிறப்புச் செய்தியாக வெளி யானது. சென்னை உயர்நீதி மன்றம் இச்செய்தியை தானாக முன்வந்து வழக்காகப் பதிவு செய்து, கந்துவட்டிக் கொடுமைக்கு  முடிவுகட்டும் வகையில் தீர்ப்பு வழங்கியது குறிப்பிடத்தக்கதாகும். இது, அனுப்பர்பாளையம் பகுதி யில், மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற போராட்ட மாகும்.

வேலம்பாளையம் நகரப்பகுதி முழுவதும் பொதுமக்களுக்கு பெரும் இடையூறாகவும், அச் சுறுத்தலாகவும் இருந்த டாஸ்மாக் மதுக்கடைகளுக்கு எதிராகத் தொடர் போராட்டங்களை நடத்தி யது மார்க்சிஸ்ட் கட்சி. குறிப்பாக, சாமுண்டிபுரம் பகுதியில் இருந்த டாஸ்மாக் மதுக்கடையை எடுக் கவே முடியாது என்று இருந்ததை மாற்றி, சிஐடியு, வாலிபர், மாதர் சங்கத்தினருடன் பகுதி மக்களைத்  திரட்டி, தொடர் போராட்டங்களை நடத்தப்பட்டது. இதனால் டாஸ்மாக் கடை அவ்விடத்திலிருந்தே அகற் றப்பட்டது. இது பெண்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்ற  குறிப்பிடத்தக்கப் போராட்டமாகும். வேலம்பாளையம் நகரப்பகுதி யில் மக்களின் அடிப்படைத் தேவை களான குடிநீர் வழங்குவதை முறைப்படுத்த, குடிநீர்க் கட்டண உயர்வுக்கு எதிராக, சொத்து வரி உயர்வுக்கு எதிராகத் தொடர் போராட்டங்கள், தெருவிளக்குகள் அமைத்திட, கழிவுநீர் வடிகால்கள் அமைத்திட / தூர்வாற, குப்பை களை அகற்ற, பழுதடைந்த சாலை களைச் சரி செய்ய, தடுப்பூசிகளை அனைவருக்கும் முறையாக வழங்கிட எனத் தொடர்ந்து மக்க ளின் நலன்களுக்காகப் போராடி வருகிறது, மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி.

;