திருப்பூர், ஜூலை 21 – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் வடக்கு மாந கர முன்னாள் செயலாளர் தோழர் பி.முருகேசனின் 3ஆம் ஆண்டு நினைவு தினம் வெள்ளியன்று கடைப்பிடிக்கப்பட் டது. திருப்பூர் தியாகி பழனிச்சாமி நிலையம் முன்பாக நடை பெற்ற அவரது நினைவு தின நிகழ்விற்கு கட்சியின் மாநகரச் செயலாளர் பி.ஆர்.கணேசன் தலைமை ஏற்றார். இதில் சிஐ டியு மாவட்டத் தலைவர் சி.மூர்த்தி, மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் கே.காமராஜ் ஆகியோர் மறைந்த தோழர் பி.முருகேசனின் பணிகள் குறித்து எடுத்துரைத்து நினைவு கூர்ந்தனர். இதையடுத்து அவரது உருவப்படத் துக்கு கே.காமராஜ், மாவட்டச் செயலாளர் செ.முத்துக்கண் ணன் உள்பட பங்கேற்ற அனைவரும் மலரஞ்சலி செலுத்தி னர்.