districts

img

கந்துவட்டி கொடுமை: ஆட்சியரிடம் புகார்

சேலம், மே 29- கந்து வட்டி கேட்டு கொடுமை செய்வதாக  சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குடும்பத்தினரோடு வந்து மனு அளித்த சம்ப வம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  சேலம் மாவட்டம் மணியனூர் எம்ஜிஆர்  நகர் பகுதியை சேர்ந்தவர் காந்தி (50). இவர்  சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்  தன்னை கந்து வட்டி கேட்டு கொடுமை செய்வ தாக கூறி புகார் மனு ஒன்றை அளித்தார். அந்த  மனுவில் கூறியிருப்பதாவது:- நான் தனியார்  நிதி நிறுவனம் ஒன்றில் மூன்று லட்சம் கடன்  பெற்றிருந்தேன். எனக்கு அன்னதானப்பட்டி எம்ஜிஆர் நகரில் 2000 சதுர அடி நிலம் உள் ளது. என்னுடைய கடனை அடைப்பதற்காக  இதில் 800 சதுர அடியை மட்டும் மணிய னூரைச் சேர்ந்த செல்வம் என்பவரிடம் ரூ.8  லட்சத்திற்கு அடமானமாக வைத்து கிரையம்  செய்து கொடுத்துள்ளார். இந்நிலையில் தற் போது கடனை செலுத்துவதாக கூறி நிலத்தை  திருப்பி கேட்கும் பொழுது அதனை திரும்ப  தர முடியாது என்றும் நிலம் என்னுடையது என்றும் கூறி கொலை மிரட்டல் விடுக்கிறார். மேலும், மூன்று மாதத்திற்கு வட்டியுடன் ரூ.33 லட்சம் கொடுக்க வேண்டும் எனக் கூறுகிறார். இதுகுறித்து சேலம் மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளதாகவும். புகாரை விசா ரித்த காவல்துறையினரிடம் நிலத்தை  திரும்பி ஒப்படைப்பதாக கூறினார் ஆனால்  இதுவரை ஒப்படைக்கவில்லை. தற்போது  நிலத்தை கேட்கும் பொழுது கொலை மிரட் டல் விடுகிறார். எனவே கொலை மிரட்டல்  விடுக்கும் நபர்கள் மீது உரிய நடவடிக்கை  எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

;