districts

img

பெரியார் பல்கலை.யில் சமூக அநீதி

சேலம், டிச.4- சமூக நீதிக்கு எதிராக சேலம் பெரியார் பல்கலைக் கழகத்தில் பேராசிரியர் பணி  நியமனங்கள் நடைபெறுவதாக அம்பேத் கர் மக்கள் இயக்கத்தினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். இதுதொடர்பாக, அம்பேத்கர் மக்கள் இயக்கத்தின் மாநிலத் தலைவர் ஜங்ஷன் அண்ணாதுரை தலைமையில் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அளித்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது. சேலம் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் சேலம் பெரியார் பல்கலைக் கழகம் சேலம், தர்ம புரி, நாமக்கல், கிருஷ்ணகிரி ஆகிய மாவட் டங்களில் உள்ள மாணவர்களின் நலன் கருதி 1997ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இந்தியா முழு வதும் உள்ள மத்திய, மாநில பல்கலைக் கழகங்களில் துறைத் தலைவர் நியம னங்கள் சுழற்சி முறையில் உள்ளது.

ஆனால், சேலம் பெரியார் பல்கலைக் கழகத் தில் துறைத் தலைவர் பதவி என்பது சுழற்சி முறையில் இல்லாமல் துறை தலைவர் களாக வருபவர்கள் பணி ஓய்வு பெறும் வரை யிலும் துறை தலைவர்களாக தொடர்ந்து நீடிக்கின்ற நிலையே உள்ளது. பெரியார் பல்கலைக்கழக சாசன விதிப் படி சுழற்சி முறை நடைமுறைப் படுத்தப் பட்டு இருந்தால் தலித் சமூகத்தை சேர்ந்த  பலர் துறை தலைவர்களாக வருவதற்கு வாய்ப்பு ஏற்பட்டிருக்கும், ஆனால் சமூக நீதிக்கு எதிராக, சாசன விதி சரியாக நடை முறைப் படுத்தப்படாமல் தலித் சமூ கத்தினர் துறை தலைவர்களாக வருகின்ற வாய்ப்பை தட்டிப் பறித்து வருகின்றனர். ஆதிக்க சாதியினர் துறைத்தலைவர், பதிவாளர், துணைவேந்தர் ஆகிய பதவி களில் இருந்து வருகின்றனர்.

இது வன்மை யான கண்டனத்திற்கு உரியது. சேலம் பெரி யார் பல்கலைக்கழகத்தில் தொடர்ந்து மூன்று பதிப்பாளர்களும் குறிப்பிட்ட சமூ கத்தை சேர்ந்தவர்களாகவே நியமனம் செய் யப்படுகின்றனர். இதனால் சாசன விதியும், இனவாரி சுழற்சி விதியும் மீறப்பட்டு வருகிறது என்பது சமூக நீதிக்கு அளிக்கப்பட்ட சாவுமணி யாகவே கருதப்படுகிறது, ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பயில்கின்ற பெரி யார் பல்கலைக் கழகத்தில் கல்வி உதவித் தொகை பெறுகின்ற எஸ்சி, எஸ்டி மாணவர் களுக்கு உரிய நேரத்தில் கல்வி உதவித் தொகை கிடைக்க வழிவகை செய்ய வேண் டும். பெரியார் பல்கலைக் கழகத்தில் கல்வி  உதவித்தொகை பெற கூடுதல் பணியாளர் களை நியமிக்க வேண்டும் எனவும் மனுவில் தெரிவித்துள்ளனர். மேலும், தமிழக முதல்வரும், ஆளு நரும் இப்பிரச்சனையில் உரிய தலையீடு செய்து சமூகநீதி கண்காணிப்பு ஆணை யம், உயர்கல்வித்துறை ஆகியவை இணைந்து பெரியார் பல்கலைக்கழகத்தில் ஆசிரியர்களுக்கும் மிகவும் பிற்படுத்தப் பட்ட ஆசிரியர்களுக்கும் இழைக்கப்பட்ட அநீதி குறித்து முறையான விசாரணை நடத்தி இப்பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என அம்மனுவில் கூறப்பட்டுள் ளது.

;