districts

img

சுப்ரமணிய சிவா கூட்டுறவு சர்க்கரை ஆலையில் அரவை பணி துவக்கம்

தருமபுரி, டிச.15- பாப்பிரெட்டிப்பட்டியில் உள்ள சுப்ரமணிய சிவா கூட்டுறவு சர்க்கரை ஆலையின் அரவை பணியை அமைச் சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் துவக்கி வைத்தார். தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப் பட்டியில் உள்ள சுப்ரமணிய சிவா கூட் டுறவு சர்க்கரை ஆலையின் 2021-22 ஆம் ஆண்டு அரவைப் பருவத்தின் ஆலை அரவையினை  வேளாண்மை  மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர்  எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் புதனன்று தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சிக்கு தருமபுரி மாவட்ட ஆட்சியர் ச.திவ்ய தர்சினி தலைமை வகித்தார். இந்நிகழ்ச் சியில், அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் பேசுகையில், தருமபுரி மாவட் டத்தில் இந்த ஆண்டு 7 ஆயிரத்து 215 ஏக்கரில் கரும்பு பயிரிடப்பட்டு, 2 லட் சத்து 40 ஆயிரம் மெட்ரிக் டன் கரும்பு அரவை செய்ய திட்டமிடப்பட்டுள் ளது. கரும்பிற்கு டன் ஒன்றுக்கு ரூ.2 ஆயிரத்து 929 வழங்கப்படும். கரும்பு வெட்டு ஆட்கள் பற்றாக்குறையை சமாளிக்கவும், வெட்டுக்கூலியை குறைக்கவும் ஆலையில் இரண்டு கரும்பு அறுவடை இயந்திரங்களும், இயந்திரம் மூலம் அறுவடை செய்த கரும்பை ஆலையில் இறக்க கரும்பு  இறக்கும் இயந்திரமும் பயன்பாட்டில் உள்ளது, என்றார். இந்நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப் பினர்கள் ஆ.கோவிந்தசாமி, வே.சம்பத் குமார், முன்னாள் சட்டமன்ற உறுப்பி னர்கள் தடங்கம்.பெ.சுப்பிரமணி, பி. என்.பி.இன்பசேகரன், முன்னாள் அமைச் சர் பி.பழனியப்பன், கூடுதல் ஆட்சியர் இரா.வைத்திநாதன், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் யசோதா மதிவாணன், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதி வாளர் சு.ராமதாஸ், அரூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை மேலாண்மை இயக் குநர் ரஹமதுல்லா கான் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

;