districts

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

துரித உணவு தயாரிப்புக்கு இலவச பயிற்சி

ஈரோடு, செப்.16-  ஈரோடு கனரா வங்கி கிராமப்புற சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிலையத்தில் துரித உணவு தயாரிப்புக்கு 10 நாட்கள் இலவச பயிற்சி அளிக்கப்பட உள்ளது. ஈரோடு கொல்லம்பாளையம் பைபாஸ் ரோட்டில் உள்ள ஆஸ்ரம் மெட்ரிக் பள்ளி வளாகத்தின் 2 ஆம் தளத்தில் உள்ள  கனரா வங்கி கிராமப்புற சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிலை யத்தில், துரித உணவு தயாரித்தலுக்கான இலவச பயிற்சி வரும் செப்.20 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை 10 நாட்கள் நடைபெற உள்ளது. இதில், ஆண், பெண் என இரு பால ரும் பங்கேற்கலாம். பயிற்சியின் போது சீருடை, உணவு ஆகி யவை இலவசமாக வழங்கப்படும். பயிற்சி நிறைவில் சான்றி தழ் வழங்கப்படும். ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த கிராமப் பகுதியை சேர்ந்த 18 வயது முதல் 45 வயதுக்கு உட்பட்ட வர்கள் பங்கேற்கலாம். வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்கள். 100 நாள் வேலை திட்டத்தில் இருப்பவர்கள், அவர்களின் குடும்பத்தாருக்கு முன்னுரிமை வழங்கப்படும். மேலும் விவ ரங்களுக்கு 0424-2400338. 87783-23213. 72006 50604 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளலாம்.

திராவிட தமிழர் கட்சி ஆர்ப்பாட்டம்

உதகை, செப்.16- கோவை மாவட்டம், அன்னூர் ஒட்டர்பாளையம் விஏஒ அலுவலகத்தில் நடந்த சம்பவத்தில் உண்மை நிலையை அறிய சிபிசிஐடி விசாரணை நடத்த வேண்டும். அன்னூரில் பதட்டத்தை ஏற்படுத்தும் வகையில் செயல்படும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். வன்கொடுமை தடுப்பு சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த கோரி திராவிட தமிழர் கட்சி சார்பில் உதகை ஏடிசி திடலில் மாவட்ட செயலாளர் தங்கராஜ் தலைமையில், மாவட்ட தலைவர் வசந்தா முன்னிலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்றனர்.

தமிழக அரசின் சமூக நீதிக்கான  தந்தை பெரியார் விருது பெற அழைப்பு

திருப்பூர், செப்.16- 2021 ஆம் ஆண்டிற்கான தமிழக அரசின் சமூக நீதிக் கான தந்தை பெரியார் விருதுக்கு தகுதி உடையவர்கள் விண் ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் எஸ்.வினீத் தெரிவித் துள்ளார். சமூக நீதிக்காக பாடுபடுவர்களை சிறப்பு செய்வதற்காக சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது 1995 ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. சமூக நீதிக்கான தந்தை பெரி யார் விருது பெறுவோருக்கு ரூ.1,00,000 விருது தொகை யும், ஒரு சவரன் தங்கப்பதக்கமும், தகுதியுரையும் வழங்கப் படுகிறது. இந்நிலையில், 2021 ஆம் ஆண்டிற்கான தமிழக அரசின் சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது வழங்கு வதற்கு உய விருதாளரை தேர்ந்தெடுக்க பரிந்துரைகள் வர வேற்கப்படுகிறது. எனவே சமூக நீதிக்காக பாடுபட்டு பொது மக்களின் வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்திட மேற்கொள் ளப்பட்ட பணிகள் மற்றும் அதன் பொருட்டு எய்திய சாதனை கள் ஆகிய தகுதிகள் உடையவர்கள் தங்களது விண்ணத் தினை மாவட்ட ஆட்சியருக்கு விண்ணப்பிக்கலாம். மேலும் ததங்களது விண்ணப்பம் தங்களின் சுயவிவரம், முழு முகவரி, தொலைபேசி எண், சமூக நீதிக்காக பாடுபட்ட பணிகள் குறித்த விவரம் மற்றும் ஆவணங்கள் உள்ளடக்கிய தாக இருந்தல் வேண்டும். விருதிற்கான விண்ணப்பங்கள் மாவட்ட ஆட்சியருக்கு வந்து சேர வேண்டிய கடைசி நாள் அக் டோபர் 31 ஆம் தேதியாகும். மேலும் விவரங்களுக்கு மாவட்ட  ஆட்சியர் அலுவலகத்தில் செயல்படும் மாவட்ட பிற்படுத்தப் பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலக அலுவ லகத்தை தொலைபேசி எண் 0421 2999130 மற்றும் மின்னஞ்சல் முகவரி bdcwotpt@gmail.com ன் வாயிலாகத் தொடர்பு கொள்ளலாம். எனவே, திருப்பூர் மாவட்டத்தில் வசிக்கும் தகுதியுடைய மக்கள் இவ்விருதினை பெற விண்ணப்பிக்குமாறு திருப்பூர் மாவட்ட ஆட்சியர் எஸ்.வினீத் கேட்டுக்கொண்டுள்ளார். 

மின் நிறுத்தம் 

இளம்பிள்ளை, செப்.16- சேலம் மாவட்டம், சங்க கிரி அருகே உள்ள சன்னி யாசிப்பட்டி துணை மின் நிலையத்தில் செப்.17 ஆம் தேதியன்று (வெள்ளியன்று) பராமரிப்பு பணிகள் நடை பெற உள்ளது.  இதனால், படைவீடு, பச் சாம்பாளையம், சங்ககிரி ரயில் நிலையம், சங்ககிரி மேற்கு, சன்னியாசிப்பட்டி, நாகிசெட்டிபட்டி, ஊஞ்சக் கொரை, தண்ணீர்பந்தல் பாளையம்,  சின்னாகவுண்ட னூர் உள்ளிட்ட பகுதிகளில் அன்றைய தினம் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்பட உள்ளது என சங்ககிரி மின்வாரிய செயற் பொறியாளர் வரதராஜன் தெரிவித்துள்ளார்.


 

;