கோவை, நவ. 28– கோவை அரசு மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை பெற்று குணமடைந்த மாவட்ட நீதிபதி ரவி, மருத்துவப் பணி யாளர்களுக்கு இரட்டிப்பு சம்பளம் வழங் கிட வேண்டுமென கோரியுள்ளார். கொரோனா நோய்த்தொற்று ஏற்பட்ட தையடுத்து கோவை மாவட்ட நீதிபதியான ஏ.எஸ்.ரவி கடந்த நவ.17 ஆம் தேதியன்று கோவை அரசு மருத்துவமனையில் சிகிச் சைக்காக அனுமதிக்கப்பட்டார். தொடர்ச்சி யான கண்காணிப்பின் மூலமும் முறையான சிகிச்சையின் மூலமும் குணமடைந்த அவர் நலமுடன் வீடு திரும்பினார். வீடு திரும்பும் முன் அவர் செய்தியாளர்களிடம் கூறுகை யில், நான் நலமுடன் குணமடைந்து வீடு திரும்பக் காரணமாகிய கோவை அரசு மருத்துவனையின் அனைத்து மருத்துவர் கள், மருத்துவப் பணியாளர்கள், சுகாராதப் பணியாளர்கள், மருத்துவமனை ஊழியர் கள் அனைவருக்கும் நன்றி. மேலும், இங்கு அளிக்கப்பட்ட உணவும், மருத்துவ முறைகளும் திருப்தியடையும்படி இருந்தது. கொரோனா பேரிடர் காலத்தில் இவ்வாறு உயிரை துச்சமெனக் கருதி பணி புரியும் அனைவரும் போற்றப்பபட வேண்டி யவர்கள். இவர்களுக்கான ஊதியம் இப்பேரிடர் காலங்களில் இரட்டிப்பு செய் யப்பட வேண்டும். இவர்களின் அளப்பரிய இப்பணி எப்போதும் நினைவு கொள்ளப் பட வேண்டும், இவ்வாறு அவர் கூறினார்.