கோவை, டிச.9– கோவை மாநகராட்சியின் 100 வார் டுகளுக்கு உண்டான வாக்காளர் பட்டி யலை கோவை மாநகராட்சி ஆணை யர் ராஜகோபால் சுன்காரா வியாழ னன்று வெளியிட்டார். கோவை மாநகராட்சி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான புகைப் படத்துடன் கூடிய வாக்காளர் பட்டி யலை கோவை மாநகராட்சி அலுவல கத்தில் ஆணையர் ராஜகோபாலன் சுங்கார வியாழனன்று வெளியிட்டார். இதில் கோவை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளில் 1290 வாக்குச் சாவடிகள், 287 வாக்குச்சாவடி மையங் கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் ஆண் வாக்காளர்கள் 7 லட்சத்து 69 ஆயிரத்து 397, பெண் வாக்காளர்கள் 7 லட்சத்து 68 ஆயரத்து 736 மற்றும் மூன்றாம் பாலினம் 278 மொத்தம் 15 லட்சத்து 38 ஆயிரத்து 411 வாக்காளர் கள் உள்ளதாக அவர் தெரிவித்தார். இந்த வாக்காளர் பட்டியல் மாநகராட்சி பிரதான அலுவலகம் மற்றும் 5 மண்டல அலுவலகங்களில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப் பட்டுள்ளது. இந்த வாக்காளர் பட்டி யல் வெளியீட்டு நிகழ்வில் மாநகராட்சி துணை ஆணையர் ஷர்மிளா, மாமன்ற செயலர் அமுல்ராஜ், உதவி ஆணையாளர் (வருவாய்) அலுவலர் செந்தில்குமார் இரத்தினம் ஆகி யோர் உடனிருந்தனர்.