districts

ஜூலை 21 – 30 ஆம் தேதி வரை கோவை புத்தக திருவிழா

கோவை, ஜூலை 18- கோவை புத்தக திருவிழா வரும் ஜூலை 21 – 30 ஆம் தேதி வரை, கொடிசியா வளா கத்தில் நடைபெறவுள்ளதாக மாவட்ட ஆட்சி யர் கிராந்திகுமார் பாடி தெரிவித்துள்ளார். கோவை மாவட்ட நிர்வாகம், கொடிசியா இணைந்து 7 ஆவது ஆண்டாக நடத்துகின்ற புத்தகத் திருவிழா – 2023, ஜூலை 21 முதல் 30 ஆம் தேதி வரை கொடிசியா வளாகத்தில் நடைபெறவுள்ளதை முன்னிட்டு, செவ்வா யன்று மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி, கொடிசியா சிட்டி அலுவலகத்தில் செய்தியா ளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் கொடிசியா தலைவர் வி.திருஞானம், புத்தக திருவிழா தலைவர் கே.ரமேஷ்  ஆகியோர் உடனிருந்த னர். அப்போது ஆட்சியர் செய்தியாளர்களி டம் கூறுகையில், கடந்தாண்டு நடைபெற்ற புத்தக திருவிழாவில் 280 அரங்குகள் மூலம் ரூ.6 கோடி மதிப்பிலான புத்தகங்கள் விற் பனை செய்யப்பட்டனது. இந்தாண்டு நடை பெறும் கண்காட்சியில் 330 அரங்குகளில், லட் சக்கணக்கான தலைப்புகளில் புத்தகங்கள் காட்சிக்கும், விற்பனைக்கும் வைக்கப்பட உள்ளன. 10 நாட்கள் நடைபெறும் இவ்விழா வில் தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, கர்நா டகா, ஆந்திரா, மகாராஷ்டிரா, பஞ்சாப், குஜ ராத் மற்றும் புதுதில்லி போன்ற பல்வேறு இடங்களிலிருந்து புகழ்பெற்ற பதிப்பாளர் கள், இந்த புத்தக்க கண்காட்சியில் பங்கேற்க  உள்ளனர். இத்திருவிழாவினை வீட்டுவசதித்துறை அமைச்சர் முன்னிலையில், பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் துவக்கி வைக்க உள்ளார். இவ்விழாவில் தினந்தோறும் புகழ்பெற்ற இலக்கிய ஆளுமைகளும், கலைஞர்களும், கலந்துகொள்ளும் கலை, இலக்கிய நிகழ்வு கள், சிறப்பு நிகழ்ச்சிகள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன. நாள்தோறும் கலை, இலக்கியவாதிகள் பங்கேற்கும் உரை வீச்சுகள், நாடங்கள் உள்ளிட்டவைகள் நாள் தோறும் நடைபெற உள்ளது. பொதுமக்கள் அவிநாசி சாலையிலிருந்து கொடிசியா செல்வதற்கு ஏதுவாக இலவச வாகன வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள் ளது. இந்த புத்தக கண்காட்சிக்கு நுழைவுக் கட்டணம் ஏதுமில்லை. கண்காட்சி தினந்தோ றும் காலை 10மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெறவுள்ளது. புத்தக வாசிப்பை ஊக் கப்படுத்தும் வகையில் 10 நாட்கள் நடை பெறும் இப்புத்தக கண்காட்சியில் புத்தக ஆர்வலர்கள், மாணவர்கள், பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும். இவ்வாறு கிராந்திகுமார் பாடி தெரிவித்துள்ளார்.