districts

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

குப்பைகளை தரம் பிரித்து வழங்க பொதுமக்களுக்கு வேண்டுகோள்

கோவை, டிச.16- கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வீடு தோறும் சேகரமாகும் குப்பைகளை மக்கும் மற்றும் மக்கா குப்பைகளாக தரம் பிரித்து பொதுமக்கள் வழங்க வேண்டும் என மாநகராட்சி ஆணையாளர் ராஜகோபால் சுன்கரா வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுதொடர்பாக கோவை மாநகராட்சி ஆணையா ளர் மற்றும் தனி அலுவலர் ராஜகோபால் சுன்கரா வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, கோவை  மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வீடுதோறும் மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை தினமும் சேகரிக்கும் பணி கள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. கடந்த 10 நாட் களுக்கு முன்பு 90 டன்னாக இருந்த மக்கும் குப்பையின் அளவு தற்போது இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது. தினமும் சுமார் 175 மெட்ரிக் டன் மக்கும் குப்பைகள் தனியாக பெறப்பட்டு வெள்ளலூர் குப்பை கிடங்கில் உரமாக தயாரிக்கப்பட்டு வருகிறது.  குப்பைகளை வீடுதோறும் தரம் பிரித்து வழங்கும் பொழுது (மக்கும் மற்றும் மக்காத குப்பை) இக்குப்பை களை எளிதாக கொண்டு சென்று செயலாக்கம் செய்ய  சிரமம் இல்லாமல் இருக்கும். ஆகவே, வீட்டில் சேகார மாகும் குப்பையில் மக்கும் மற்றும் மக்கா குப்பையாக தரம் பிரித்து கொடுக்க வேண்டும். மேலும், மாநகராட்சிக் குட்பட்ட அனைத்து ஹோட்டல் மற்றும் வணிக நிறுவ னங்களிலும் கருப்பு கலர் பாலித்தீன் கவர்களை உப யோகிக்காமல், மக்கும் மற்றும் மக்கா குப்பைகளை தனித்தனியாக பெட்டிகளில் சேகரித்து மாநகராட்சி பணி யாளர்களிடம் ஒப்படைக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

நீலகிரி: கடும் பணியால் தேயிலை மகசூல் பாதிப்பு

உதகை, டிச.16- நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக உறைபனி கொட்ட தொடங் கியுள்ளது. உதகை மற்றும்  சுற்றுப்புற பகுதிகளான காந்தல் உள்ளிட்ட இடங்க ளில் உள்ள சாலையோர புல் வெளிகளிலும் உறைபனி காணப்படுகிறது. உறைபனி யுடன் கடும் குளிரும் நிலவு வதால் மக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகியுள்ளனர். கடுமையான பனியால் அதி காலையில் தேயிலை தோட் டங்களுக்கு வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள் மிகவும் பாதிக்கப்பட்டனர்.  இந்த பகுதிகளில் அதிக ளவில் மலைக் காய்கறிக ளான கேரட், முள்ளங்கி மற் றும் தேயிலை செடிகள் பயிரி டப்பட்டுள்ளன. கடந்த 3 நாட் களுக்கும் மேலாக நிலவி வரும் உறைபனி காரணமாக தேயிலை மகசூல் பாதிப்ப டைந்துள்ளது. இதுதவிர மலைக்காய்கறி பயிர்களில்  பூச்சிகள் தொல்லை அதிக ரித்துள்ளதால் பயிர்கள் சேத மாகவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

திருப்பூரில் 350 கிலோ கஞ்சா பறிமுதல்

திருப்பூர், டிச.16- ஆந்திர மாநிலத்தில் இருந்து காரில் கடத்தி வரப்பட்ட  350 கிலோ கஞ்சாவை காவல் துறையினர் பறிமுதல் செய்து,  ஒருவரை கைது செய்தனர். திருப்பூர் மாநகர காவல் ஆணையாளர் வே.வனிதா  வியாழனன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: திருப்பூ ரில் காவல்துறை தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர ரோந்து மற்றும் சிறப்பு சோதனை மேற்கொள்ளப்பட்டு வரு கிறது. இதில், அனில்குமார் தலைமையிலான தனிப்படை யினர் கடந்த நவ.29 ஆம் தேதியன்று திருப்பூர் வடக்கு காவல் நிலைய சரகத்தில் சுமார் 15 கிலோ அளவுள்ள கஞ்சா கைப்பற்றப்பட்டு வழக்குப்பதிவு  செய்தனர். கஞ்சா கடத்தி வந்த நபர்களை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.  இந்த வழக்கு குறித்து தீவிர விசாரணை மேற்கொண்ட தில், தேனி மாவட்டத்தில் இருந்து திருப்பூர் மாநகரத்திற்கு கஞ்சா கடத்தி வந்து வியாபாரம் செய்யும் நபர்கள் தொடர் பான தகவல்கள் கண்டறியப்பட்டன. அதனடிப்படையில் தொடர்ந்து புலன் விசாரணை செய்தபோது ஆந்திர பிரதேச மாநிலம், விசாகப்பட்டினத்தில் இருந்து காரில் திருப்பூர்  மாநகரத்திற்கு கஞ்சா கடத்தி வருவதாக தகவல் கிடைத் தது. இதையடுத்து அனுப்பர்பாளையம் காவல் நிலைய ஆய்வாளர் சென்னகேசவன் தலைமையிலான காவலர்கள் வியாழனன்று அதிகாலை அங்கேரிபாளையம் ரோடு, கொங்கு நகர் பள்ளி அருகே தீவிர வாகன தணிக்கையில் ஈடு பட்டனர்.  இதில், தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி, காந்தி கிரா மத்தை சேர்ந்த மு.பால்பாண்டி (27) என்பவர் ஓட்டி வந்த  காரை போலீசார் நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது, வாகனத்தில் சுமார் 350 கிலோ அளவுள்ள கஞ்சா கடத்தி வந் தது தெரியவந்தது. இதன்பின் 350 கிலோ கஞ்சா, கடத்தி வந்த  கார் ஆகியவற்றை கைப்பற்றி பால்பாண்டியை கைது  செய்து விசாரணை மேற்கொண்டனர். மேலும், இளைஞர் கள் நலன் கருதியும், அவர்களின் எதிர்காலத்தை கருத் தில் கொண்டும் தமிழக அரசின் உத்தரவின்படி தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள், கஞ்சா ஆகிய வற்றை வைத்திருப்பவர்கள் மற்றும் விற்பனை செய்பவர் கள் மீது தொடர்ந்து சட்டப்படி கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும், என அவர் தெரிவித்தார்.

;