districts

img

விசைத்தறி உள்ளிட்ட தொழிலாளர்களுக்கு கூலி உயர்வு

நாமக்கல், செப்.19- விசைத்தறி உள்ளிட்ட தொழிலில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு 75 சதவிகிதம் கூலி உயர்வை வழங்க வேண்டும் என சிஐடியு நாமக்கல் மாவட்ட மாநாட்டு தீர்மானத்தில் வலி யுறுத்தியுள்ளது.  இந்திய தொழிற்சங்க மையம் நாமக்கல் மாவட்ட 8 ஆவது மாநாடு தோழர் பி.சிங்காரம் நினைவரங்கத் தில் (நாமக்கல் சிஐடியு மாவட்ட குழு அலுவலகம்) நடைபெற்றது. மாநாட்டிற்கு சிஐடியு மாவட்ட தலை வர் எம்.அசோகன் தலைமை தாங் கினார். எம்.செங்கோடன் கொடியேற்றி வைத்தார். கே.மோகன் அஞ்சலி தீர் மானத்தை முன்மொழிந்தார். வர வேற்பு குழு தலைவர் ஆர்.முருகே சன் வரவேற்புரையாற்றினார். மாநாட்டை துவக்கிவைத்து சிஐடியு மாநில செயலாளர் டி.உதயகுமார் உரையாற்றினார். மாவட்டச் செயலா ளர் ந.வேலுசாமி வேலை அறிக்கை யும், பொருளாளர் எம்.ரங்கசாமி வரவு செலவு அறிக்கையும் முன்வைத்த னர்.

கட்டுமான தொழிலாளர்களுக்கு புதுச்சேரியில் ஆண்டுதோறும் தீபா வளி போனஸ் வழங்குவது போன்று  தமிழகத்தில் தீபாவளி போனஸ்  வழங்க வேண்டும். தொழிலாளர் விரோத நான்கு சட்ட தொகுப்பு களை திரும்ப பெற வேண்டும். விலை வாசி உயர்வை கட்டுப்படுத்த வேண் டும். தொழிலாளர்களுக்கு 8 மணி நேர வேலை என்பதை உறுதிப்படுத்த வேண்டும். சிறு குறு தொழில்களை பாதுகாக்க மின் கட்டண உயர்வை தமிழக அரசு திரும்பப்பெற வேண் டும். பள்ளிபாளையம், குமாரபாளை யம் வெப்படை பகுதி உள்ளிட்ட பகு திகளில் பணிபுரியும் விசைத்தறி உள் ளிட்ட தொழிலாளர்களுக்கு 75 சத விகிதம் கூலி உயர்வு வழங்க வேண் டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. இம்மாநாட்டில், மாவட்ட தலை வராக எம்.அசோகன், செயலாள ராக ந.வேலுசாமி, பொருளாளராக எம்.ரங்கசாமி உள்ளிட்ட 15 நிர்வா கிகள் 45 பேர் கொண்ட மாவட்ட குழு தேர்வு செய்யபட்டது. மாநாட்டை நிறைவு செய்து சிஐடியு மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.சுப்பிரமணியன் உரையாற்றினார். முடிவில், வர வேற்பு குழு பொருளாளர்  எல்.ஜெய கொடி நன்றி கூறினார்.

;