districts

img

சுமைத் தொழிலாளர்களுக்கு அடையாள அட்டை வழங்க அரசுக்கு சிஐடியு மகாசபை கோரிக்கை

திருப்பூர், செப். 23 – சுமைப்பணித் தொழிலாளர்க ளுக்கு அடையாள அட்டை வழங்க  வேண்டும் என்று தமிழக அரசுக்கு திருப்பூர் மாவட்ட சுமைப்பணித் தொழிலாளர் சங்கத்தின் 46ஆவது ஆண்டு மகாசபை வலியுறுத்தி உள் ளது. திருப்பூர் பார்க்ரோடு கே.எஸ். ஆர். மண்டபத்தில் வெள்ளிக்கிழமை  சுமைப்பணித் தொழிலாளர் சங்கத் தின் மாவட்டத் தலைவர் எம்.ராஜகோ பால் தலைமையில் மகாசபைக் கூட் டம் நடைபெற்றது. சுமைப்பணித்  தொழிலாளர் சம்மேளனத்தின் மாநி லத் தலைவர் எஸ்.குணசேகர் இந்த  மகாசபையை தொடக்கி வைத்துப் பேசினார். சுமைப்பணி தொழிலாளர் சங்கத் தின் செயலாளர் கே.உண்ணிகி ருஷ்ணன் ஆண்டறிக்கையை முன் வைத்தார். சிஐடியு மாவட்டச் செயலா ளர் கே.ரங்கராஜ், சாலையோர வியாபாரிகள் சங்கச் செயலாளர் பி. பாலன் ஆகியோர் வாழ்த்திப் பேசி னர். இந்த மகாசபையில் சுமைத்  தொழிலாளர்கள் பெருந்திரளா னோர் கலந்து கொண்டனர்.

நலவாரியத்தில் பதிவு செய்திருக் கும் அனைத்து சுமைப்பணித் தொழி லாளர்களுக்கும் நலவாரியத்தின் மூலம் போனஸ் வழங்க வேண்டும், அடையாள அட்டையை அரசே  வழங்க வேண்டும், சுமைப்பணித்  தொழிலாளர்களுக்கு தனி நலவாரி யம் அமைக்க வேண்டும், அந்த தொழிலாளர்களுக்கு சமூகப் பாது காப்பு, சட்டப் பாதுகாப்பு வழங்க  வேண்டும், அந்த தொழிலாளர்கள் ஓய்வெடுப்பதற்கு சாலையோரம் ஓய்வுப் பந்தல் அமைக்க அனுமதி  வழங்க வேண்டும்,சுமைப் பணித்  தொழிலாளர் வேலை, வாழ்வாதாரம்  பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த சங்கத்தின் தலைவராக எம். ராஜகோபால், செயலாளராக கே. உண்ணிகிருஷ்ணன், பொருளா ளராக ஜெயராம், துணைத் தலை வர்களாக மார்க்கெட் தங்கவேல், கூட் செட் கனகராஜ், மணி,துணைச்  செயலாளர்களாக கிஷோர்குமார், பி.பாலன், அபி ஆகியோரும், கமிட்டி  உறுப்பினர்கள் 15 பேரும், சிறப்பு அழைப்பாளர்கள் 15 பேரும் என  மொத்தம் 39 பேர் தேர்வு செய்யப்பட் டனர்.

;