districts

img

மாவட்ட ஆட்சியர் அறிவித்த ஊதியம் வழங்க கோரி சிஐடியு உள்ளாட்சி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர், செப். 5 - திருப்பூர் மாவட்ட உள்ளாட்சிகளில் வேலை செய்யும் தினக்கூலி ஒப்பந்தத்  தொழிலாளர்களுக்கு மாவட்ட ஆட்சி யர் அறிவித்த குறைந்தபட்ச ஊதி யத்தை வழங்க வலியுறுத்தி சிஐடியு ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழி யர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தி னர். திருப்பூர் மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர் சங்கத்தின்  சார்பில் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு திங்களன்று ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு திருப்பூர்  மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர்கள் சங்க மாவட்ட தலை வர் பி.பழனிசாமி தலைமை வகித்தார்.  சிஐடியு மாவட்ட செயலாளர் கே.ரங்க ராஜ், சிஐடியு மாவட்டத் துணைத் தலை வர் கே.உன்னிகிருஷ்ணன், திருமுரு கன் பூண்டி நகராட்சி கவுன்சிலர் சுப்பிரம ணியம் உள்ளிட்ட பலர் கோரிக்கை களை வலியுறுத்தி பேசினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் திருப்பூர்  மாவட்டத்தில் பணிபுரியும் மாநகராட்சி,  நகராட்சி, பேரூராட்சிகள் மற்றும் கிராம  ஊராட்சிகளில் ஒப்பந்த அடிப்படை யில் தினக்கூலி தொழிலாளர்களாக வேலை செய்யும் தூய்மை பணியா ளர்கள், குடிநீர் பணியாளர்கள், ஓட்டுநர் கள், கொசுப்புழு ஒழிப்பு பணியாளர்கள்  ஆகியோருக்கு  தமிழக அரசின் தொழி லாளர் துறை வழிகாட்டுதல் அடிப்படை யில் மாவட்ட ஆட்சியர் அறிவித்த குறைந்தபட்ச ஊதியத்தை வழங்க வேண்டும். ஒப்பந்ததாரர்கள்  ஊதியத் தைக் குறைத்து வழங்குவதையும், இபி எப் பிடித்தம் செய்வதில் ஒப்பந்ததார ரின் பங்கை செலுத்தாமல் இருப்பதை யும் களைந்து முழுமையான பங்களிப்பு  வழங்கவும் வலியுறுத்தி முழக்கங்களை  எழுப்பினர்.  இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்டம்  முழுவதும் இருந்து உள்ளாட்சி அமைப் புகளைச் சேர்ந்த தொழிலாளர்கள்  திர ளான தூய்மை தொழிலாளர்கள் மற்றும்  குடிநீர் பணியாளர்கள் என சுமார் 500  பேர் கலந்து கொண்டநர்.  இந்த ஆர்ப்பாட்டத்தின் முடிவில் சங்க நிர்வாகிகள் ஆட்சியரை சந்தித்து  அரசாணைப்படி ஊதியத்தை அனைத்து உள்ளாட்சிகளிலும் தொழி லாளர்களுக்கு வழங்குவதை உத்தர வாதம் செய்யும்படி கோரிக்கை மனு அளித்தனர்.

;