ஈரோடு, அக்.3- சிஐடியு அரசு போக்குவரத்து ஊழியர் மற்றும் ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் சார்பில் பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி பெருந்துறை கிளை முன்பு ஆர்ப்பாட் டம் நடைபெற்றது. ஓய்வு பெற்றோருக்கு அகவிலைப்படி நிலுவைத்தொகை உள்ளிட்ட பணபலன்களை காலம் தாழ்த்தாமல் உடனே வழங்க வேண்டும். தேவைக்கேற்ற ஊழியர்களை நியமனம் செய்ய வேண்டும். ஒப்பந்த ஊழியர்களை அமைக்கும் திட்டம் மற்றும் தனியார்மய முயற்சியைக் கைவிட வேண்டும் உள் ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு போக்கு வரத்து ஊழியர் மற்றும் ஓய்வூதியர்கள் நல அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஈரோடு மாவட்டம், பெருந் துறை அரசு போக்குவரத்து கழக பனிமனை முன்பு நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியு அரசு போக்குவரத்து ஊழி யர் சங்க கிளை தலைவர் கருப்புசாமி தலைமை வகித்தார். இதில், செயலாளர் மேகநாதன், பொருளாளர் ராஜேந்திரன், ஓய்வு பெற்றோர் சங்க நிர்வாகிகள் பி.ஜெகநாதன், கே.கன்னி யப்பன், சுப்பிரமணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.