திருப்பூர், அக். 15 - திருப்பூர் மாவட்டம், பல்லடம், பனப்பாளையம் பிரிவில் சிஐடியு ஆட்டோ தொழிலாளர் சங்க புதிய கிளை சனிக்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது. திருப்பூர் மாவட்ட ஆட்டோ சங்க மாவட்ட தலைவர் டி.வி. சுகுமார், மாவட்டச் செயலாளர் எஸ்.சிவராமன், மாவட்டத் துணைத் தலைவர் பெருமாள் ஆகியோர் பங்கேற்று செங் கொடி ஏற்றி வைத்து, பெயர்ப்பலகையைத் திறந்து வைத்த னர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பல்லடம் ஒன்றியச் செயலா ளர் ஆர்.பரமசிவம், ஒன்றியக்குழு உறுப்பினர் முருகசாமி ஆகியோர் பங்கேற்று வாழ்த்து தெரிவித்தனர். லட்சுமி மில் ஆட்டோ கிளை தலைவர் ராமலிங்கம், பல்லடம் அரசு மருத்து வமனை ஆட்டோ ஸ்டான்ட் நாசர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த விழாவில் பனப்பாளையம் பிரிவு ஆட்டோ கிளை சண்முகம், பாபு, ராஜேஷ், பெருமாள், வடிவேல் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.