districts

img

தேசிய ஜூனியர் குதிரையேற்ற சாம்பியன் போட்டியில் சென்னை அணிக்கு 18 பதக்கங்கள்

சென்னை, ஜன.4- சென்னை குதிரையேற்ற  மையத்தைச் சேர்ந்த இளம் குதிரையேற்ற வீரர்கள் புதுதில்லியில் நடைபெற்ற தேசிய ஜூனியர் சாம்பியன்  ஷிப் போட்டியில்  18 பதக்கங்   களை கைப்பற்றினர். வரலாற்று சிறப்புமிக்க இந்த சாதனை இதுவரை நிகழ்த்தாத ஒன்றாகும். இந்த வெற்றி, டிரெசேஜ் எனப்படும்  கீழ்ப்படிதல் போட்டிகளில் தொடர்ந்து முதன்மை இடத்தை பெற்று வரும் சென்னையை தள மாகக் கொண்ட குதிரை யேற்ற பயிற்சி மையத்திற்கு ஒரு முக்கிய முத்திரையை பதிக்கும்  சாதனையாகும்.  குழந்தைகளுக்கான  2 வது  பிரிவில் (10-12 வயது), கெவின் கேப்ரியல், தனது குதிரையான சோல்மேட்டில் (போட்டி பெயர்: செக்ஸ் ரிச்ச்டிஜே) சவாரி செய்து, தங்க பதக்கத்தை உறுதி செய்வதில் முக்கிய பங்கு வகித்தார். அவர் தனிப்பட்ட முறையில் வெள்ளிப் பதக்கத்தையும் பெற்றார். அதே சமயம் அவரது சக அணிவீரர் ஈஷான் சுந்த ரம் தனது கருப்பு நிற பெண் குதிரையான, ஃபேம் ஆஃப் வைபர்ட்டி மூலம் தங்கத்தை கைப்பற்றி னார். தனது குதிரை கிராண்ட்டியூக்கில் புனவ் சுரேஷும்  மற்றும் கோயம் புத்தூரைச் சேர்ந்த ஹாசினி பி ஆகியோரும் அணியில் இடம்பெற்றுள்ளனர்.  இளையோர் பிரிவில் மிராயா தாதாபோய் தனது குதிரை நாக்-அவுட்டுடனும்  சங்கரா ராத்தோர் அவரது குதிரை எஃப்டியுடனும் இணைந்து அணிக்கான தங்கப்பதக்கத்தை கைப்பற்றினர். “குதிரை சவாரி செய்வதில் சிறப்பாக செயல்பட, குதிரைக்கும் அதனை சவாரி செய்பவ ருக்கும் இடை யிலான பிணைப்பு உச்ச செயல்பாட்டில் இருக்க வேண்டியது  அவசியம். குழந்தைகள் மற்றும் இளையவர்களை  மனரீதி யாகவும், உடல் ரீதியாகவும் வலிமையாக்குவதுடன், அவர்களின் 500 கிலோ எடையுள்ள விளையாட்டுக் கூட்டாளியான குதிரையுடன் நம்பகமான உறவை உரு வாக்க இது ஒரு சிறந்த விளையாட்டாகும்.  10 வயதில் சவாரி செய்யத் தொடங்கிய கெவின் கேப்ரியல் ஏற்கெனவே ஒரு சாத னையைப் படைத்துள்ளார். 2022ல் அவர் தனது முதல் தேசிய போட்டியில் வெற்றி பெற்று சிறந்த இளைய குதிரைசவாரி வீரர்  என்ற விருதைப் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.