ஈரோடு, மார்ச் 13- அந்தியூர் பகுதியில் வீட்டு மனை கேட்டு, சிபிஎம், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி தலைமையில் நடைபெற்ற பல ஆண்டு போராட்டம் வெற்றிய டைந்தது. பட்டா கிடைத்த எளிய உழைப்பாளி மக்கள் சிபிஎம் தலைவர்களிடம் கொடுத்து வாழ்த்தை பெற்ற சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. ஈரோடு மாவட்டம், அந்தியூர், மந்தை மாரியம்மன் கோவில் பகுதி யில் 33 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். பெரும்பாலும் தூய்மைப்பணி செய்பவர்களும், சாதாரண கூலித் தொழிலாளர்க ளும், ஊர் ஊராக சென்று ஊசி, பாசி, சிறு பாத்திரங்கள், விற்பதே இங்குள்ளவர்களின் பணியாக இருந்து வருகிறது. இவர்கள் வீட்டு மனைப் பட்டா கேட்டு, கடந்த 10 ஆண்டு காலமாக போராட்டங்கள் நடத்தி வந்தனர். குறிப்பாக, கடந்த 2013 ஆம் ஆண்டு அந்தியூரில் இருந்து கோபிசெட்டிபாளையம் (வருவாய் கோட்ட தலைமையகம்) வரை நடைபயணமாகச் சென்று மனுக்கள் கொடுத்தனர். இதையறிந்த தமிழ்நாடு தீண் டாமை ஒழிப்பு முன்னணியினர், மக்களுக்கான பட்டா கேட்ட அன்றைய மாநிலத் தலைவர் பி.சம் பத் தலைமையில் காத்திருக்கும் போராட்டத்தை முன்னெடுத்தனர். இப்போராட்டத்தின் எதிரொலி யாக, 9 பேருக்கு மட்டும் பட்டா வழங்கப்பட்டது. எஞ்சியவர்களுக் கும் பட்டா வேண்டும் என கோரிக் கையை முன்வைத்து, தீண்டாமை ஒழிப்பு முன்னணி தொடர் போராட் டங்களை முன்னெடுத்து வந்தது. இதனிடையே, 2018இல் சிபிஎம் அரசியல் தலைமைக்குழு உறுப்பி னர் ஜி.ராமகிருஷ்ணன், மக்கள் வாழ்ந்து கொண்டிருந்த இடத்தை நேரில் பார்வையிட்டார். இதன் பின்னரும் பல கட்ட போராட்டங் கள் நடத்தப்பட்டு வந்தன. இந்நிலையில், கடந்த 2023 ஆம் ஆண்டு சீனிவாசராவ் நினைவு தினத்தன்று, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில துணைப் பொதுச் செயலாளர் சுகந்தி தலைமையில் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் காத்திருக்கும் போராட்டம் நடை பெற்றது. இப்போராட்டத்தில், மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் ஆர்.ரகுராமன், ததீஒமு மாவட்டத் தலைவர் பிபி.பழனி சாமி, செயலாளர் மா.அண்ணா துரை மற்றும் ஏ.எம்.முனுசாமி, ஏ.கே.பழனிசாமி, முருகேசன் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் பாதிக் கப்பட்ட மக்களுக்கு ஆதரவாக போராட்டத்தில் கலந்து கொண்ட னர். அன்றைய தினம் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் 23 பேருக்கு 15 நாட்களில் பட்டா வழங்க உறுதி யளிக்கப்பட்டது. ஆனால் குறிப் பிட்ட தேதியில் பட்டாக்கள் வழங் கப்படவில்லை. அதற்கான, தொடர் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப் பட்டு வந்த நிலையில், செவ்வா யன்று நடைபெற்ற அரசு நிகழ்ச்சி யில் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜி.வெங்கடாசலம், வீட்டுமனைப் பட்டா கோரிய 23 பேரில் 21 பேருக்கு பட்டாக்களை வழங்கி னார். பட்டாக்களை பெற்றுக் கொண்ட பயனாளிகள் மார்க்சிஸ்ட் கட்சி மற்றும் ததீஒ முன்னணியின் தலைவர்களிடம் தங்களது பட்டாக் களை கொடுத்து பின்பு வாங்கிக் கொண்ட சம்பவம் நெகிழ்வை ஏற்ப டுத்தியது.