districts

img

உங்கள் சிந்தயைத் தூண்டிய புத்தகங்கள் எவையெல்லாம்?

புத்தகங்கள் எனது சிந்தனையை இரண்டு விதத்தில் தூண்டியுள்ளன. ஒரு காலத்தில் சங்கம்புழயின் வாழக்குலை ஒரு முழுமையான, வித்தியாசமான சமூக சிந்தனையைத் தந்தது. எதனால் இது நிகழ்கிறது என்று சிந்தித்தேன். இது மிக அதிக அளவில் எனது சிந்தனையைத் தூண்டியது. ஒத்துப்போதல் என்ற கருத்து குறித்து இளமைக்காலத்தில் ஆய்வு செய்துள்ளேன். நோபல் பரிசு பெற்ற ஐஸ்லாந்து நாட்டைச் சார்ந்த இலக்கியவாதி ஹாரோல்டு லாக்ஸினெஸின் நாவல்களை வாசித்தபோது ஒரு மனிதனால் செய்யக்கூடிய செயல்களை எந்தத் திசையிலெல்லாம் திருப்பிவிடலாம் என்ற அடிப்படையான கேள்வி எழுந்தது. மிகையில் ஸொலோகோவின் நாவல்களும் அத்தகையத் தன்மை உடையவையாகும். நான் கருத்துக்களைத் தேடி நடந்தேன். எதாவது ஒரு கருத்தை முன்வைக்கின்ற புத்தகங்களைத் தேடிப்பிடித்து வாசிப்பேன். சின்கிளையரின் படைப்புகள் குறித்து எப்போதோ வாசித்து அறிந்துள்ளேன். அவரது புத்தகங்கள் கிடைக்கவில்லை. நீண்ட காலத்திற்குப் பிறகுதான் ஜங்கிள், டேமேஜ்டு குட்ஸ் ஆகியவைகளை வாசிக்க முடிந்தது. அவையெல்லாம் சமூகப் பிரச்சனைகளை உயர்த்திப் பிடிப்பவையாகும். பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கான வழிமுறைகளையும் அ ந்தப் புத்தகங்களே சுட்டிக்காட்டுகின்றன. டிஸ்கவரி ஆஃப் இந்தியாவை வாசித்தது ஒரு ஆவேசகரமான நிகழ்வாகும். அர்த்தம் தெரியாத பல்வேறு வார்த்தைகளுக்கான அர்த்தத்தை அவ்வப்போது அகராதியைப் பார்த்து அறிந்து கொண்டேன். அது எனக்கு ஒரு திருப்புமுனையாக அமைந்தது. பேராசிரியர் கே.என்.பணிக்கர்

;