districts

img

தருமபுரியில் நூல் அறிமுக கூட்டம்

தருமபுரி, அக்.3– எழுத்தாளர் ஐ.மாதவராஜ் எழுதிய “காந்தி புன்ன கைக்கிறார்” நூல் அறிமுக கூட்டம் ஞாயிறன்று நடை பெற்றது. அக்டோபர் 2 காந்தி பிறந்த நாளை முன்னிட்டு ஜா.மாத வராஜ் எழுதிய காந்தி புன்னகைக்கிறார் நூல் அறிமுகம் மற்றும் கலந்துரையாடல் கூட்டம் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பில் தருமபுரி முத்து  இல்லத்தில் நடைபெற்றது.  ஆசிரியர் பெ.துரைராஜ் நூலை அறிமுகம் செய்து பேசினார். இதனைத்தொடர்ந்து தமு எகச மாவட்ட செயலாளர் சிங்காரவேலு, மாநிலக்குழு உறுப்பினர் நவகவி, மாவட்ட கல்வி அலுவலர் ஓய்வு  ராஜசேகர், ஆசிரியர் மா.பழனி, பேராசிரியர் கு.சிவப்பிர காசம் ஆகியோர்‌ கலந்து கொண்டு உரையாற்றினர்.

;