தருமபுரி, டிச.20- தருமபுரியில் டிச.23 ஆம் தேதி முதல் டிச.26 ஆம் தேதி வரை மாபெரும் புத்தக கண்காட்சி மதுரபாய் சுந்த ரராஜராவ் திருமண மண்டபத்தில் நடைபெற உள்ளது என தகடூர் புத்தக பேரவை தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக தகடூர் புத்தக பேரவையின் செய லாளர் இரா.செந்தில், தலைவர் இரா.சிசுபாலன், ஒருங் கிணைப்பாளர் இ.தங்கமணி ஆகியோர் தருமபுரி முத்து இல்லத்தில் செய்தியாளர்களிடம் கூறியதா வது, தகடூர் புத்தக பேரவையின் சார்பில் கடந்த 2018-19 ஆம் ஆண்டில் பத்து நாட்கள் புத்தக திருவிழா தரும புரியில் வெற்றிகரமாக நடத்தப்பட்டது. ஆனால், கொரோனா பெருந்தொற்றின் காரணமாக 2020 ஆம் ஆண்டில் புத்தக திருவிழாவை நடத்த முடியவில்லை. தற்போது கொரோனா தொற்று குறைந்துவரும் நிலை யில், 4 நாட்கள் தருமபுரியில் புத்தக திருவிழா நடத்த உள்ளோம். இந்த ஆண்டு டிச.23 ஆம் தேதி முதல் டிச.26 ஆம் தேதி வரை தருமபுரி மதுராபாய் சுந்தரராஜ ராவ் திருமண மண்டபத்தில் நடைபெற உள்ளது. இதில், மாவட்ட ஆட்சியர் ச.திவ்யதர்சினி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ச.கலைசெல்வன், ராணுவ விஞ்ஞானி வி.டில்லிபாபு, தொல்லியல் அறிஞர் அமர் நாத் ராமலிங்கம், எழுத்தாளர் பவா. செல்லதுரை உள் ளிட்ட பலர் கலந்து கொள்ள உள்ளனர். இப்புத்தக திருவிழாவில் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும், என்றனர்.