districts

img

சேலம் மாநகரில் வெடிகுண்டு தடுப்புப்பிரிவு சோதனை

சேலம், ஏப்.6- நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு, சேலம் ஆட்சியர் அலுவலகம் உட்பட மாந கரின் முக்கிய பகுதிகளில் வெடிகுண்டு தடுப் புப்பிரிவு காவல் துறையினர் சோதனை மேற் கொண்டனர். தமிழ்நாட்டில் வரும் ஏப்.19 ஆம் தேதி  நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.  இதனை முன்னிட்டு, குண்டு வைத்து அசம்பா விதம் ஏற்படுத்த சமூக விரோதிகள் நடவ டிக்கை எடுத்திருப்பதாக உளவுத்துறைக்கு தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் மாநி லம் முழுவதும் சோதனை மேற்கொள்ள பட்டு வருகிறது. சேலம் மாவட்டத்தில் மாநகரக்  காவல் ஆணையர் விஜயகுமாரி உத்தரவின் பேரில், நான்கு பேர் கொண்ட எட்டு குழுக் கள் அமைக்கப்பட்டு, பொதுமக்கள் அதிகம்  கூடும் இடம், தேர்தல் நடத்தும் அலுவலகம்  மற்றும் தேர்தல் வாக்குப்பதிவு மையங்கள்  உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சோதனை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டது அதன டிப்படையில் வெடிகுண்டு தடுப்புப்பிரிவு சிறப்பு குழு சேலம் மாவட்ட ஆட்சியர் அலு வலகத்தில் பல்வேறு இடங்களில் அதிரடி  சோதனை மேற்கொண்டனர். இதைத் தொடர்ந்து பால் மார்க்கெட், அரசு மருத் துவமனை, மாநகராட்சி அலுவலகம், டவுண்  உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சிறப்புக் குழு வினர் சோதனை நடத்தி வருகின்றனர். இதே போல கொண்டலாம்பட்டி, அஸ்தம்பட்டி, சூர மங்கலம் மண்டலத்துக்குட்பட்ட பகுதிக ளிலும் வெடிகுண்டு தடுப்புப்பிரிவு சிறப்புக் குழுவினர் சோதனை மேற்கொண்டு வரு கின்றனர். இதுகுறித்து வெடிகுண்டு தடுப்புப்பி ரிவு அதிகாரிகள் கூறுகையில், வரும் தேர்த லில் அசம்பாவிதம் ஏற்படும் என்று வந்த  தகவலை அடுத்து சோதனை நடத்தப்பட்டு வருகிறது. பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், மக்கள் அதி கம் கூடும் இடங்கள், தேர்தல் அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சோதனை  மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த சோதனை ஏப்.19 ஆம் தேதி வரை இரவு  பகலாக 24 மணி நேரமும் மேற்கொள்ளப் படும், என்றனர்.