districts

img

வெளுத்து வாங்கிய கோடை மழை: சாலைகளில் வெள்ளம்

திருப்பூர், மே 17- திருப்பூர் மற்றும் கோவை மாவட் டத்தில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மழை கொட்டித்தீர்த்தது. இத னால், குளிர்ச்சியான சூழல் நிலவி வரு கிறது. திருப்பூர் மற்றும் அதன் சுற்றுவட் டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. அவ்வப்போது லேசான மழை இருந்த நிலையில், வானிலை ஆய்வு மையம் திருப்பூரில் 17ஆம் தேதி கனமழை பெய்யும் என மஞ்சள் எச்ச ரிக்கை விடுத்திருந்தது. அதன்படி வெள் ளியன்று காலை முதலே வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. வெயிலின் தாக்கம் குறைந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது. இந்த நிலையில் மதியத் திற்கு மேல் கருமேகங்கள் திரண்டு, இடி யுடன் கூடிய கனமழை பெய்யத் தொடங் கியது.   திருப்பூர் மாநகரை சுற்றியுள்ள பெருமாநல்லூர் சாலை, அவிநாசி சாலை, காங்கேயம் சாலை, தாராபுரம் சாலை, பல்லடம் சாலை, மங்கலம் சாலை என பல பகுதிகளில் கன மழை பெய்தது. இந்த கனமழை காரணமாக சாலைகளில் மழைநீர் கரை புரண்டு ஓடி யது. இதன் காரணமாக வாகன ஓட்டி கள் பாதிக்கப்பட்டனர். திருப்பூர் மாநகர் பகுதிகளில் கனமழை பெய்தது, பொது மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது. கோவை இதேபோன்று, கோவை நகரின் பல் வேறு பகுதிகளில் வெள்ளியன்று மாலை, சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக மிதமான மழை பெய்தது. மசக்காளிபாளையம், பீளமேடு, சிங்கா நல்லூர், நவஇந்தியா, புலியகுளம், இடையார்பாளையம், கவுண்டம்பா ளையம் உட்பட நகரின் பல்வேறு பகுதி களில் மிதமான மழை பெய்தது. சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலாக பல்வேறு பகுதிகளில் மழை பெய்தால் குளிர்ந்த சூழல் நிலவியது.

;