districts

img

பள்ளிகள் திறப்பு எதிரொலி: பழுதுபார்க்க குவியும் சைக்கிள்கள்

நாமக்கல், ஜூன் 1 ஜூன் 10 ஆம் தேதியன்று தமிழ் நாட்டில் பள்ளிகள் திறக்க உள்ள நிலையில், சைக்கிள்களை பழுது பார்க்கும் பணி தீவிரமடைந்துள் ளது. தமிழகம் முழுவதும் அரசு மற் றும் தனியார் பள்ளிகள் நடை பெற்று வந்த அரசு பொது தேர்வு கள் நிறைவு பெற்ற நிலையில், கடந்த மே மாதம் முழுவதும் கோடை விடுமுறை விடப்பட்டது. தற்போது ஜூன் 10ஆம் தேதி பிறகு அரசு மற்றும் தனியார் பள்ளிகள்  திறக்கப்பட உள்ள நிலையில், பள்ளி செல்வதற்கு மாணவ மாணவியர் ஆயத்தமாகி வருகின்றனர். இந் நிலையில் நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் குமாரபாளையம் பகுதியில் அரசு உதவிபெறும் பள் ளிகள் அரசு பள்ளிகள் அதிகளவு செயல்பட்டு வருகிறது. குறிப்பாக  பள்ளிபாளையம் ஆவரங்காடு  பெண்கள் பள்ளியில் 1500க்கும் மேற் பட்ட மாணவிகளும், குமாரபாளை யம் சாலையில் உள்ள அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்களும் கல்வி பயின்று வரு கின்றனர். ஒவ்வொரு ஆண்டும் தமி ழக அரசு சார்பில் 11 மற்றும் 12ஆம்  வகுப்பு மாணவ மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கப் பட்டு வருகிறது. தொலைதூரங்களி லிருந்தும் கிராமப்புற பகுதிகளிலி ருந்தும், அரசு பள்ளிக்கு கல்வி  பயில வரும் மாணவ மாணவர்க ளின் சிரமங்களை கருத்தில் கொண்டு ஒவ்வொரு ஆண்டும் தமிழக அர சின் சார்பில் இதற்கான சிறப்பு நிதி ஒதுக்கப்பட்டு, விலையில்லா சைக் கிள் வழங்கப்பட்டு அதை மாணவ, மாணவியர் பயன்படுத்தி வருகின்ற னர். தற்போது பள்ளிகள் ஒரு மாத காலமாக கோடை விடுமுறையில் இருந்ததால் மாணவ மாணவியர் சைக்கிள்களை பயன்படுத்தாமல் வீட்டிலேயே வைத்துவிட்டனர்.  தற்போது மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட உள்ளதால், சைக்கிள் தேவை ஏற்பட்டுள்ளதை அடுத்து, சைக்கிளிலுள்ள சிறிய அளவிலான பழுதுகளை நீக்குவதற்கும், சைக் கிள் டயர்களை மாற்றுதல் உள் ளிட்ட வேலைகளுக்காக பள்ளி பாளையம் திருச்செங்கோடு சாலை யில் செயல்படும் சைக்கிள் கடை களில் மாணவ மாணவியர் அதிக அளவில் சைக்கிள்களை சரி செய்ய கொண்டு வந்துள்ளனர்.  இதுகுறித்து சைக்கிள் கடை தொழிலில் 30 ஆண்டுகளுக்கு மேலாக இருக்கும் குப்புசாமி கூறு கையில், அரசு சார்பில் விலை யில்லா சைக்கிள் வழங்கப்பட்டா லும், சைக்கிள்களில் உள்ள சிறிய  அளவிலான பழுதுகளை நீக்குவ தற்கு என்னிடம் தான் கொண்டு வந்து மாணவ, மாணவியர் சைக் கிளை விட்டுச் செல்வர்கள். தற் போது மீண்டும் பள்ளிகள் திறக்க உள்ளதால் மாணவ, மாணவியர் தங்கள் சைக்கிளிலுள்ள சிறிய அள விலான பழுதுகளை நீக்கி தருமாறு என்னிடம் சைக்கிள்களை விட்டுச் செல்கிறார்கள்.  மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட உள்ளதால் இனி எப் போதும் போல வேலைகள் இருக் கும் என எதிர்பார்ப்பதாக தெரிவித் தார்.

;