districts

img

பாரதி விழா கொண்டாட்டம்

அவிநாசி, டிச.12- அவிநாசி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி யில் சனியன்று பாரதி பிறந்த நாள் விழா கொண்டாடப்பட் டது. அவிநாசி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி யில் தமிழ் துறை, கோவை இந்துஸ்தான் கலை அறி வியல் கல்லூரி, திருப்பூர் கனவு இலக்கிய வட்டம் ஆகியவை சார்பில் பாரதி பிறந்த நாள் விழா நடைபெற் றது. இந்நிகழ்ச்சிக்கு அவிநாசி கல்லூரி முதல்வர் ஜோ.நள தம் தலைமை வகித்தார். அவிநாசி கல்லூரி தமிழ்த்துறைத் தலைவர் போ.மணிவண்ணன் வரவேற்றார். பாரதியாரின் எள்ளு பெயரன் நிரஞ்சன் பாரதி கானொளி மூலம் சிறப் புரையாற்றினார்.  இதைத்தொடர்ந்து கல்லூரி மாண வர்கள் சார்பில் பாரதி குறித்த இசை நிகழ்ச்சி, உரை நிகழ்ச்சி  உள்ளிட்டவை நடைபெற்றது. இந்துஸ்தான் கல்லூரி காட்சித்த தொடரியியல் துறைத் தலைவர் சுப்ரமணியன் நடேசன், கனவு இலக்கிய வட்ட எழுத்தாளர் சுப்பிரபாரதி மணியன் ஆகியோர் மாணவர்களுக்கு பரிசுகளை வழங் கினர். நிறைவாக,  கல்லூரி மாணவிகள் பாரதி எனும் பெயர் வடிவில் நின்று மரியாதை செலுத்தினர். அவிநாசி கல்லூரி  தமிழ்த்துறைத் தலைவர் போ.மணிவண்ணன், கௌரவ விரிவுரையாளர்கள் தே.புனிதராணி, ம.நந்தினி ஆகியோர் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர். மாணவர் ச.சந்தோஷ் நன்றி தெரிவித்தார்.  இதேபோல், அவிநாசி பெண்கள் மேல்நிலைப் பள்ளி யில் உள்ள பாரதி உருவச் சிலைக்கு, பள்ளி மாணவர் கள், பல்வேறு சமூக அமைப்பினர், சமூக ஆர்வலர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

;