பனியன் தொழிற்சங்க நிர்வாகி தோழர் வி.நடராசன் படத்திறப்பு
அவிநாசி, ஜூலை 15 - திருமுருகன்பூண்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கிளை உறுப்பினராகவும், சிஐடியு பனியன் தொழிற்சங் கத்தின் முன்னாள் பொருளாளராகவும் பணியாற்றிய வி.நடரா சன் படத்திறப்பு புகழஞ்சலி கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடை பெற்றது.
தோழர் வி.நடராசன் உடல் நலக்குறைவு காரணமாக கடந்த மே மாதம் காலமானார். இந்த நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி திருமுருகன்பூண்டி நகராட்சி கிளைகள் சார்பில் படத்திறப்பு புகழஞ்சலி கூட்டம், திருமுருகன் பூண்டி ஜீவா படிப்பகத்தில் நடைபெற்றது. நகர்மன்ற உறுப்பி னர் சுப்பிரமணியம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் செ.முத்துகண் ணன் நடராஜன் திருவுருவப்படத்தை திறந்து வைத்தார். இந்த நிகழ்வில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் சி.மூர்த்தி, கே.ரங்கராஜ், டி.ஜெய பால், ஒன்றியக் கவுன்சிலர் பி.முத்துசாமி, ஒன்றியச் செயலாளர் ஈஸ்வரமூர்த்தி, முன்னாள் ஒன்றியச் செயலாளர் எஸ்.வெங்க டாசலம், மாவட்டக்குழு உறுப்பினர் பழனிசாமி, ஒன்றியக்குழு உறுப்பினர்கள் பாலசுப்பிரமணியம், சண்முகம், மோகனசுந்த ரம், காமராஜ், வையாபுரி, நகர்மன்ற உறுப்பினர் தேவராஜ், திமுக நகர்மன்ற உறுப்பினர் முருகசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
கூடுதல் வகுப்பறை கட்டித்தர சிபிஎம் கோரிக்கை மனு
அவிநாசி, ஜூலை 15 – அவிநாசி அருகே நடுவச்சேரியை அடுத்த கருக்கங்காட் டுப்புதூர் அரசுப் பள்ளிக்கு கூடுதல் வகுப்பறை, சமையல் கூடம் கட்டித் தர மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை மனு அளித்துள்ளது.
அவிநாசி ஒன்றியம், நடுவச்சேரி ஊராட்சிக்குட்பட்ட கருக் கங்காட்டு புதூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அமைந் துள்ளது. இதில் நடுவச்சேரி, வடுகபாளையம், சின்னேரிபா ளையம் ஊராட்சிக்குட்பட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து 130க்கும் மேற்பட்ட குழந்தைகள் கல்வி பயின்று வரு கின்றனர். இப்பள்ளியில் நான்கு வகுப்பறைகள் மட்டுமே இருக்கிறது. இதனால் கல்விப் பயிலும் மாணவர்களுக்கு மிகுந்த நெருக்கடி ஏற்படுகிறது. மேலும் மதிய உணவு திட்டத் தில் வகுப்பறையிலேயே உணவு பரிமாறப்பட்டு, அங்கேயே மாணவ, மாணவிகள் உணவு உண்ணும் சூழ்நிலை இருக்கிறது. எனவே கூடுதல் வகுப்பறைகளும், மதிய உணவு சாப்பிடுவதற்கு கூடுதல் உணவுக்கூடம் தனியாக அமைத்துத் தரும்படி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நடுவச்சேரி கிளை சார்பில் கல்வி அதிகாரியிடம் கோரிக்கை மனு அளிக் கப்பட்டது.
இம்மனுவை பெற்றுக் கொண்ட கல்வி அதிகாரி, இது குறித்து உரிய அதிகாரிகளுக்கு தெரிவித்து விரைவில் தீர்க்கப் படும் என பதிலளித்தார். இந்நிகழ்வில் மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினர் பழனிசாமி, கிளைச்செயலாளர் சுப் பிரமணி, ராஜேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
அம்பேத்கருக்கு முழு உருவ வெண்கல சிலை வைக்க கோரிக்கை
திருப்பூர், ஜூலை 15- திருப்பூர் ஈஸ்வரன் கோவில் வீதியில் உள்ள அம்பேத்கர் சிலையை முழு உருவ வெண்கல சிலையாக அமைத்து தர வேண்டும் என தேசிய புலிகள் கட்சியினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்களன்று மனு அளித்துள்ளனர்.
திருப்பூர் மாநகராட்சி 44ஆவது வார்டு ஈஸ்வரன் கோயில் வீதியில் மாநகராட்சிக்கு பாத்தியப்பட்ட இடத்தில் கடந்த 40 ஆண்டுகளுக்கு மேல் சட்டமேதை புரட்சியாளர் அம்பேத்க ரின் மார்பளவு சிமெண்ட் சிலை இருந்து வருகிறது. அம்பேத் கர் சிலையை சுற்றி வணிக நோக்கிலான கடைகள் செயல்பட்டு வருகிறது. மேலும், சட்டத்திற்கு புறம்பாக தனிநபர் வாடகை வாங்குவதாகவும் கூறப்படுகிறது. எனவே சிலையை சுற்றி யுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண் டும். அம்பேத்கர் சிலையை முழு உருவ வெண்கலச் சிலை யாக அமைத்துத் தர வேண்டும் என அவர்கள் கேட்டுக் கொண் டனர்.