பொள்ளாச்சி, அக்.18- பொள்ளாச்சி நகராட்சிக்குட்பட்ட பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை நகராட்சி சுகாதார ஆய்வாளர் தலைமையிலான குழுவினர் பறிமுதல் செய்தனர். தமிழக அரசால் கடந்த 2019 ஆம் ஆண்டு ஜனவரி மாதத் தில் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தமிழக அரசு தடை விதித்து அரசாணை வெளியிட்டது. இதனைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் பிளாஸ்டிக் பொருட் களின் பயன்பாடு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இந் நிலையில், கோவை மாவட்டம், பொள்ளாச்சி நகர பகுதி களில் அதிகளவிலான தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்துவந்துள்ளது நகராட்சி நிர்வாகத்திற்கு தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து பொள்ளாச்சி நகராட்சி சுகாதார ஆய்வாளர் தலைமை யிலான குழுவினர் நகர் பகுதி முழுவதும் ஆய்வு மேற் கொண்டனர். இந்த ஆய்வின் முடிவில், ரூ.50 ஆயிரம் மதிப்பிலான தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப் பட்டது. இதனை பொள்ளாச்சி நகராட்சி தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன் மற்றும் நகராட்சி ஆணையாளர் தாணு மூர்த்தி, நகர்நல மற்றும் சுகாதார ஆலுவலர்கள் முன்னி லையில் நகராட்சி ஊழியர்கள் ஒப்படைத்தனர்.