districts

img

படித்துக் கொண்டே பயணிக்க ஆட்டோ தம்பி துவக்கம்

கோவை, அக்.7-  ஆட்டோ தம்பி என்ற பெயரில் நம்மைத் தேடி வரும் நடமாடும் நூலகம் கோவையில் செயல்படத் துவங்கி யுள்ளது. கோவையில் உள்ள பெரும்பாலான பொதுமக்கள் தங்க ளது பயணத்திற்கு ஆட்டோவை பயன்படுத்தி வருகின்ற னர். பயணிகள் மற்றும் ஆட்டோ ஓட்டுநர்கள் மத்தியில் வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்தும் விதமாக ஆட்டோ தம்பி என்ற பெயரில் ஆட்டோ நூலகம் தொடங்கப்பட்டுள்ளது. துடியலூர் பகுதியை சேர்ந்த சையது என்பவர் தனது ஆட்டோவில் புத்தகங்கள், செய்தித்தாள்களை வைத்துக் கொண்டு சவாரி எடுக்கிறார். டாக்டர் கலாம் பவுண்டேசனின் முயற்சியில் ரூ.20 ஆயிரம் மதிப்பில் இந்த ஆட்டோ நூலகம் “ஆட்டோ தம்பி” என்ற பெயரில் இந்த நடமாடும் நூலகம் செயல்படுகிறது. தமிழ் நாவல்கள், உரைநடை புத்தகங்கள் வாராந்திர மற் றும் மாத இதழ்கள் இதில் இடம் பெற்றுள்ளன. வாடிகை யாளர்களுக்காக ஆட்டோவில் இனிப்புகள், குடிநீர், சானிடை சர் மற்றும் முகக்கவசங்கள் வைக்கப்பட்டுள்ளன. ஆட்டோ வில் பயணிக்கும் வாடிக்கையாளர்கள் செல்போனையே பய ன்படுத்திக் கொண்டிருப்பதாகவும், அவர்களிடையே வாசிப்பு பழக்கத்தை அதிகரிக்க வேண்டும் என்பதற்காக இந்த முயற்சியை கையில் எடுத்துள்ளதாக சையது தெரி வித்தார். முன்னதாக இந்த ஆட்டோ தம்பி நடமாடும் நூலகத்தை கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் துவக்கி வைத்தார்.

;