districts

img

கலைஞர் நூற்றாண்டு: மரக்கன்றுகள் நடவு

ஈரோடு, ஜூன் 10- கலைஞர் கருணாநிதியின் பிறந்த நாள் நூற்றாண்டை முன்னிட்டு, ஈரோடு மற்றும் நாமக்கல்லில் மரக் கன்றுகள் நடவு செய்யப்பட்டன. முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் சு. முத்துசாமி ஈரோடு - பெருந்துறை சாலை, அத்தப்பம்பாளையம் பிரிவு பகுதியில் நெடுஞ்சாலைத் துறையின் சார்பில் மரக்கன்றுகளை நட்டு வைத்தார். இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா  தலைமை ஏற்றார். ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், மாநகராட்சி மேயர் சு.நாகரத்தினம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்ச்சியில் அமைச்சர் பேசு கையில், தமிழக மக்களின் நெஞ்சில்  நீங்கா இடம்பிடித்த முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, மாநிலம் முழு வதும் பல்வேறு திட்டப்பணிகளை மேற்கொள்ள தமிழ்நாடு முதல்வர் அறிவுறுத்தியுள்ளார். இந்த ஒரு  வருட காலம் கலைஞர் பிறந்தநாளை கொண்டாடும் நோக்கமாக மட்டும் இல்லாமல், பொதுமக்களுக்கு ஏராளமான நன்மைகள் செய்ய  வேண்டும் என அறிவுறுத்தப்பட் டுள்ளது. அந்த வகையில், இன்றைய  தினம் (சனியன்று) ஈரோடு கோட் டத்தின் சார்பாக சுமார் 12 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்படுகிறது. மேலும்,  மாநகராட்சிக்குட்பட்ட பகுதி களில் பொதுமக்கள் பயன்பெறும்  வகையில் சுமார் ரூ.2.27 கோடி மதிப் பீட்டில் 6 புதிய திட்டப்பணிகளும் துவங்கப்பட்டுள்ளது, என்றார்.

நாமக்கல்

இதேபோல், நாமக்கல் நெடுஞ் சாலை கோட்டத்தின் சார்பில் 12  ஆயிரம் மரக்கன்றுகள் நடும் திட் டத்தை, மோகனூர் வட்டத்திற்குட் பட்ட லத்துவாடி கிராமம், அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி எதிரில் மாநிலங்களவை உறுப் பினர் கே.ஆர்.என்.ராஜேஸ்குமார்  சனியன்று துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சி யர் மருத்துவர் ச.உமா தலைமை ஏற்றார். இதில், நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் பெ.ராமலிங்கம், நெடுஞ்சாலைத்துறை கோட்டப் பொறியாளர் கே.ஆர்.திருகுணா, உதவிக்கோட்டப் பொறியாளர் அசோக்குமார், உதவிப் பொறி யாளர் பாலகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.