சேலம், ஆக.6- சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில், செவ்வாயன்று கலைஞர் நினைவு நாள் சொற்பொழிவு நிகழ்ச்சி நடை பெற்றது. சேலம் பெரியார் பல்கலைக்கழக ஆட்சிப்பேரவைக் கூடத் தில் செவ்வாயன்று, முத்தமிழறிஞர் கலைஞர் மு.கருணாநிதி ஆய்வு மையம் சார்பில், கலைஞர் நினைவு நாள் சொற்பொ ழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு பல்கலைக் கழக துணைவேந்தர் ரா.ஜெகநாதன் தலைமை வகித்தார். முத்தமிழறிஞர் கலைஞர் மு.கருணாநிதி ஆய்வு மைய இயக் குநர் ரா.சுப்பிரமணி வரவேற்றார். இதனையடுத்து, “கலைஞர் படைப்புகள்: கருத்தியல், அழகியல்” என்ற தலைப்பில் தஞ் சைத் தமிழ் பல்கலைக்கழக நாட்டுப்புறவியல் துறைத்தலை வர் ரா.காமராசு பேசுகையில், சாதியின் பெயரால் நிகழ்ந்த அநீதிகளைக் களைவது, பெண்ணுரிமைக்கு குரல் கொடுப் பது, பெண்களுக்கும் சமத்துவம் அளிப்பது, பெண்கள் மறும ணம், எளிய மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு சமத்துவத்தை நாட்டுவது அடிப்படையாகக் கொண்டு கலைஞரின் படைப்பு கள் அமைந்திருக்கிறது. அவர் ஆட்சிக் காலத்தில் உருவாக் கிய நிறுவனங்கள், சின்னங்கள் பலவற்றை நினைவு கூர்வ தாக அமைந்துள்ளன. கதை, கவிதை என எந்த தளத்தில் எடுத்துக்கொண்டாலும் அதில் சமூக அக்கறைக்கு பிரதான இடத்தை கலைஞர் அளித்தார். மனித சமத்துவம் வந்து விட்டதா என்ற கேள்வி இப்போதும் உள்ளது. அதற்கான போர்க்களம் நீண்டு நெடியதாக இன்னும் நீடிக்கிறது, என்றார். முன்னதாக, கலைஞரின் உருவப்படத்திற்கு பேராசிரியர் கள், மாணவ, மாணவிகள் மலர்தூவி மரியாதை செலுத்தினர். முடிவில், முனைவர் பட்ட ஆய்வாளர் நா.இல.நரேன்குமார் நன்றி கூறினார்.