districts

சட்டமன்றப் பேரவை பொதுக் கணக்குக்குழு பரிந்துரை

தருமபுரி, அக்.12- ஒகேனக்கல்லில் மீன் வளர்ப்பு ஆராய்ச்சி நிலையம் அமைக்க பரிந்துரை செய்வதாக சட்டமன்ற பேரவை பொதுக் கணக்குக்குழு தெரிவித்துள்ளது.  தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை, பொதுக் கணக்குக் குழுத் தலைவர்  கு.செல்வபெருந்தகை தலை மையில் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை, பொதுக் கணக்குக்குழு  ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இதில், இக்குழுவின் சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர். முன்னதாக இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர்  ஆட்சியர் கி. சாந்தி வரவேற்புரையாற்றினார்.  பின்னர் தமிழ்நாடு சட்டமன்றப்  பேரவை, பொதுக் கணக்குக்குழு வின் தலைவரும், ஸ்ரீ பெரும் புதூர் சட்டமன்ற உறுப்பினர் கு. செல்வபெருந்தகை பேசுகையில், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை,  பொதுக் கணக்குக்குழு தரும புரி மாவட்டத்தில் பல்வேறு பகுதி களுக்கு சென்று, பல்வேறு வளர்ச்சி திட்டங்களை நேரில்  பார்வையிட்டு ஆய்வு செய்தது.  இதில் குறிப்பாக பென்னாகரம்,  ஒகேனக்கல்லில் மீன்வளத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள  மீன் பண்ணையினை மேம்படுத்தி,  மீன் குஞ்சுகள் உற்பத்தி செய்யும்  வசதிகளை ஏற்படுத்தி ஆராய்ச்சி நிலையம் ஏற்படுத்துவதற்கு உரிய  நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென பரிந்துரை செய் துள்ளது. மேலும், கடந்த காலத்தில்  தருமபுரி மாவட்டத்தில் 28 குவாரி களுக்கு அனுமதி அளிக்கப் பட்டுள்ளது. இதில், 7 குவாரிகள் மட்டுமே சுற்றுச்சூழல் அனுமதி பெற்று இயங்கி வருகிறது. 21  குவாரிகள் சுற்றுச்சூழல் அனுமதி  இல்லாமல் இயங்கி வருவதாக புகார் வந்துள்ளது. இந்த குவாரி களுக்கு மின்சாரம் இணைப்பு இருக்கிறதா, அதை ஏன் துண்டிக்க வில்லை என்று ஒசூர் சட்ட மன்ற உறுப்பினர் கேள்வி எழுப் பினர். அதைத்தொடர்ந்து சுற்றுச்  சூழல் அனுமதியின்றி இயங்கிய  21 குவாரிகள் மூடப்பட்டுள்ளது.

இருப்பினும், இக்குவாரிகளில் அளவீடு செய்து அதில் விதிமுறை கள் மீறியது தெரியவந்தால், அது  தொடர்பான அடுத்தக்கட்ட நடவ டிக்கை மேற்கொள்ளப்படும். வனத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள முதலைப் பண்ணையினை ஆய்வு செய்த போது அங்கு பணிபுரிந்து வரும் 4 பணியாளர்களுக்கு ஊதிய குறைபாடு இருப்பது குறித்து அறியப்பட்டு, அவர் களுக்கு அரசு நிர்ணயித்துள்ள  ஊதியத்தினை வழங்குதற்கு உரிய  நடவடிக்கை உடனடியாக மேற் கொள்ள வேண்டுமெனவும் இக் குழு பரிந்துரைத்தது. இக்குழுவின் பரிந்துரையை ஏற்று, காலையில் இட்ட உத்தர விற்கு உடனடி நடவடிக்கையினை மேற்கொண்டு, மாலையில் நடை பெறுகின்ற இந்த ஆய்வு கூட்டத்தி லேயே அந்த 4 பணியாளர் களுக்கும் ஊதிய மாறுபாட்டினை சரிசெய்து, ஊதிய உயர்வோடு நிலுவைத் தொகைக்கான காசோ லைகள் ஒவ்வொரு நபருக்கும் வழங்கப்பட்டது. மேலும், பென்னாகரம் அரசு  ஆதிதிராவிடர் மாணவர் விடுதி யினை ஆய்வு செய்த போது, இவ் விடுதி மிகச்சிறப்பாக பராமரிக்கப் பட்டு வருவதையும், மாணவர் களுக்கு தேவையான அனைத்து  வசதிகளும் ஏற்படுத்தப்பட்டு  உள்ளதையும் இக்குழு வெகுவாக  பாரட்டியதோடு, உடனடியாக ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சரை  தொலைபேசியின் மூலம் தொடர்பு கொண்டு, பென்னாகரத்தில்  உள்ள ஆதிதிராவிடர் மாணவர்  விடுதி மிகச்சிறப்பாக பராமரிக்கப் பட்டு வருவதை முன்னுதாரணமாக  கொண்டு தமிழ்நாடு முழுவதும்  உள்ள விடுதிகளை இதேபோல்  பராமரிக்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டது, என்றார்.